13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

தவெக 6 மாத ஆட்சி: “ஓர் அரசின் பயணத்தைத் தெரிந்துகொள்ள 6 மாதம் போதும்" – திமுக எம்.பி கான்ஸ்டன்டைன்

Date:

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான ஜெயக்குமாரிடம் பேசினோம்.

இந்தப் பகுதியில் திமுக மாநிலங்களவை எம்.பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது, “ஒர் அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாத காலத்தை நிறைவு செய்துள்ளது. நமக்கு எதிரான அரசாகவே இருந்தாலும், ஏதேனும் ஒரு நல்ல திட்டத்திற்காகப் பாராட்டலாமா என்று யோசித்துப் பார்த்தால், அப்படிப் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லை. தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட சிலிண்டர் மானியம் போன்ற திட்டங்கள் கூட இவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை.

முதல்வர் விஜய்

அதேபோல, இலவச மின்சாரத்தை 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்குவதாகக் கூறினார்கள். ஆனால், அந்த 200 யூனிட் மின்சாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது, எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்பது குறித்த எந்தத் தெளிவான விவரமும் தெரியவில்லை. சாதாரணமாக நமக்கு 2 கோடியே 40 லட்சம் மின் இணைப்புகள் இருக்கின்றன. இதில் சுமார் 1 கோடியே 40 லட்சம் பயணர்களுக்கு மின்சாரம் வழங்கியிருந்தால், மின்சார வாரியத்தின் வருமானம் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இன்றுவரை வருமானம் குறைந்ததாக மின்சார வாரியம் கணக்கு காட்டவில்லை. அப்படியானால், அந்தத் தொகையை எப்படி ஈடுசெய்தீர்கள் என்ற கேள்வி எழுகிறது.

கல்வியைப் பொறுத்தவரை, நீங்கள் ‘இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறோம்’ என்று வெளியில் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மும்மொழிக் கொள்கையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறார்கள். ‘பி.எம். ஸ்ரீ’ (PM SHRI) பள்ளிகள் விவகாரத்திலோ அல்லது இது தொடர்பான பிற விஷயங்களிலோ இன்னும் ஒரு தெளிவான முடிவை எடுக்காமல், தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கே தயாராகி வருகிறார்கள்.

ஒர் அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டுமென்றால், அதை ‘EEE’ அடிப்படையில் ஆய்வு செய்வோம். முதலாவது கல்வி (Education), இரண்டாவது வேலைவாய்ப்பு (Employment), மூன்றாவது வறுமை ஒழிப்பு (Eradication of Poverty).

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

இந்த மூன்று முக்கியக் காரணிகளைத் தாண்டி, ஜனநாயக நாடுகளில் சட்டம்-ஒழுங்கு (Law and Order) எவ்வாறு உள்ளது என்பதையும் சேர்த்து, இந்த நான்கு அடிப்படைகளில்தான் ஓர் அரசின் செயல்திறனைப் பார்ப்போம்.
ஆனால், இந்த நான்கு துறைகளிலுமே தற்போதைய அரசு கடந்த ஆறு மாதங்களில் ஏதேனும் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளதா என்று பார்த்தால், எதுவுமே இல்லை என்பதே நிதர்சனம்.

ஆறு மாத காலத்திற்குள் எல்லாத் திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்று நாம் எப்போதும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், இந்த அரசின் ‘திசைவழிப் பயணம்’ எதை நோக்கி இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு இந்த ஆறு மாத காலமே போதுமானது.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி (GST) வரி வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது. அதோடு, இங்கு வரவிருந்த பல தொழிற்சாலைகளும், முதலீடுகளும் தற்போது அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் சென்று கொண்டிருக்கின்றன. இங்கு வந்த தொழில் அதிபர்களும், தொழிற்சாலைகளும் ஏன் வெளியேறுகிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், இந்த அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுதான் அதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டால், எனக்குத் தெரிந்தவரை இந்த ஆறு மாத காலத்தில் பொருளாதாரத் துறையிலோ அல்லது தொழில் துறையிலோ புதிதாக எந்தவொரு வேலைவாய்ப்பும் பெரியளவில் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

முதலீடு - ஒப்பந்தம்
முதலீடு – ஒப்பந்தம்

வறுமை குறைந்திருக்கிறதா என்று பார்த்தால், அதற்கு நேர்மாறாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து கிடக்கிறது. முன்பு குறைந்த விலைக்கு வாங்கிக்கொண்டிருந்த அரிசியின் விலை 60 – 100 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது எனத் தாய்மார்கள் வேதனைப்படுகிறார்கள்.

அரிசி மட்டுமல்லாது எல்லாப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளன. விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறியதால் பணவீக்கம் அதிகரித்து, ஒட்டுமொத்தப் பொருளாதாரமே சீர்குலைந்து போயுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களிலும் ஊழல் மலிந்துள்ளது. உதாரணமாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் அண்டை மாநிலத்தில் ரூ.4,000 ரூபாய்க்கு வாங்கும் நிலையில், இந்த அரசு ரூ.7,500-க்கு வாங்குகிறது. இறுதியாக, சட்டம்-ஒழுங்கு நிலைமையைப் பற்றி யாருக்கும் புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், `திருவிழாக் காலங்களில் கொலைகள் நடக்கத்தான் செய்யும்’ என்று ஒரு அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்.

அதுமட்டுமல்லாமல், தங்களது தவறை நியாயப்படுத்துவதற்காகப் பொய்யான தரவுகளையும் முன்வைக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் தீபாவளியன்று மொத்தமாகவே 14 கொலைகள்தான் நடந்திருக்கின்றன. எத்தனை எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. ஒரு கொலை நடந்தாலும் கொலை கொலைதான்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கொலைகளையும் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொண்டு கடந்து செல்வது உண்மையிலேயே ஒரு கொடூரமான சிந்தனை. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பும் இன்று பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. “சிங்கப் பெண்கள்” எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் அளவிற்குத்தான் தற்போதைய சூழல் நிலவுகிறது.

இதுவரை நாம் அரசாங்கத்தின் மீதிருந்த குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், அரசியலைத் தாண்டி மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது முதன்மையான நோக்கம். எனவே, ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ‘சட்டம்-ஒழுங்கு’தான். சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தாலே மற்ற அனைத்துத் துறைகளும் தானாகவே சரியாகிவிடும். எனவே, இந்த அரசு முதலில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கு அடுத்தபடியாக, கல்வித் துறையில் நிலவும் குழப்பங்களைக் களைந்து, அதைச் சீர்படுத்த வேண்டும். மேலும், அரசுத் துறைகளில் சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான காலிப் பணியிடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றை உடனடியாக நிரப்பி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தொழில் முதலீடுகளை ஈர்த்தல் (Industrial Investment), சட்டம்-ஒழுங்கு (Law and Order), வேலைவாய்ப்பு (Employment), மற்றும் கல்வி (Education) ஆகிய இந்த நான்கு முக்கியத் துறைகளில் மட்டும் இவர்கள் முழுக் கவனம் செலுத்தினாலே போதும். மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുഖ്യ മന്ത്രിക്കും മന്ത്രിമാര്‍ക്കും പുതിയ കാറുകള്‍; 9.60 കോടിയുടെ 24 ഇന്നോവകള്‍ വാങ്ങാന്‍ സര്‍ക്കാര്‍

തിരുവന്തപുരം: മുഖ്യ മന്ത്രിക്കും മന്ത്രിമാര്‍ക്കും പുതിയ കാറുകള്‍ വാങ്ങാന്‍ വി.ഡി. സതീശന്‍...

"மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட ரீதியாக உதவுங்கள்" – மோடியிடம் உதவி கேட்ட DK சிவகுமார்

மேக்கேதாட்டு அணை கட்டுவதை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் கர்நாடகா முதலமைச்சர்...

Iran Crisis: కిడ్నీ నుంచి వృషణాల వరకు.. శరీర అవయవాలను అమ్ముకుంటున్న ఇరాన్ ప్రజలు!

Iran Crisis: ఇరాన్ ఆర్థిక సంక్షోభంతో కొట్టుమిట్టాడుతోంది. అమెరికాతో యుద్ధం, అంతర్జాతీయ...

യു.ഡി.എഫ് സർക്കാരിനെ നയിക്കുന്നത് നെഹ്‌റുവിന്റെ ആശയങ്ങളല്ല, ഗീബൽസിന്റെ നുണപ്രചാരണ തന്ത്രങ്ങൾ: പിണറായി വിജയൻ

കാലടി: കാലടി സംസ്കൃത സർവകലാശാലയിലെ വിദ്യാർത്ഥി സമരത്തിന് പൂർണ പിന്തുണ പ്രഖ്യാപിച്ച്...