13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

"மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட ரீதியாக உதவுங்கள்" – மோடியிடம் உதவி கேட்ட DK சிவகுமார்

Date:

மேக்கேதாட்டு அணை கட்டுவதை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.

தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்புகளை அவர் கண்டுகொள்வதாக இல்லை. மேக்கேதாட்டு அணை தமிழ்நாட்டிற்குத் தான் பெரும்பாலும் பயன்படும் என்கிற கூற்றை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார்.

இன்று இந்தியப் பிரதமர் மோடி பெங்களூருவிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அவர் முன்னிலையில் டி.கே.சிவகுமார் காவேரி குறுக்கே அணைக் கட்டுவது குறித்துப் பேசியிருக்கிறார். அதற்காக மோடியிடம் உதவியும் கேட்டுள்ளார் டி.கே.சிவகுமார்.

டி.கே.சிவகுமார்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

“காஸ்மோஸ்-மைசூரு கோளரங்கத்தை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கர்நாடக மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகப் பிரதமர் இங்கு வந்துள்ளார். எங்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்.

அதேபோல, காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த விஷயத்தில் நீங்கள் எங்களுக்குச் சட்டரீதியாக உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வனத்துறை அனுமதிகளுக்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இது மிகவும் முக்கியமான ஒரு சமநிலை நீர்த்தேக்கம். எனவே, உங்கள் நிர்வாகம் எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുഖ്യ മന്ത്രിക്കും മന്ത്രിമാര്‍ക്കും പുതിയ കാറുകള്‍; 9.60 കോടിയുടെ 24 ഇന്നോവകള്‍ വാങ്ങാന്‍ സര്‍ക്കാര്‍

തിരുവന്തപുരം: മുഖ്യ മന്ത്രിക്കും മന്ത്രിമാര്‍ക്കും പുതിയ കാറുകള്‍ വാങ്ങാന്‍ വി.ഡി. സതീശന്‍...

Iran Crisis: కిడ్నీ నుంచి వృషణాల వరకు.. శరీర అవయవాలను అమ్ముకుంటున్న ఇరాన్ ప్రజలు!

Iran Crisis: ఇరాన్ ఆర్థిక సంక్షోభంతో కొట్టుమిట్టాడుతోంది. అమెరికాతో యుద్ధం, అంతర్జాతీయ...

യു.ഡി.എഫ് സർക്കാരിനെ നയിക്കുന്നത് നെഹ്‌റുവിന്റെ ആശയങ്ങളല്ല, ഗീബൽസിന്റെ നുണപ്രചാരണ തന്ത്രങ്ങൾ: പിണറായി വിജയൻ

കാലടി: കാലടി സംസ്കൃത സർവകലാശാലയിലെ വിദ്യാർത്ഥി സമരത്തിന് പൂർണ പിന്തുണ പ്രഖ്യാപിച്ച്...

சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர்...