27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

"இந்தியா 'விஸ்வகுரு' ஆவதற்கான வலிமையும் கட்டமைப்பும் நம்மிடம் இல்லை" – RSS தலைவர் மோகன் பகவத்

Date:

‘இந்தியா உலக அரங்கில் ஒரு வலிமைமிக்க நாடாக மாறுவதையும், மறுமலர்ச்சி அடைவதையும் சில சக்திகள் விரும்பவில்லை’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “இந்தியா இப்போது மறுமலர்ச்சியை நோக்கிய திசையில் பயணிக்க வேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் உள்ளது.

மோகன் பகவத் – RSS

ஆனால் இந்தியா உலக அரங்கில் ஒரு வலிமைமிக்க நாடாக மாறுவதையும், மறுமலர்ச்சி அடைவதையும் சில சக்திகள் விரும்பவில்லை.

இந்திய மக்களிடையே பிரிவினையை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள். மிகச் சிறிய விஷயங்களைக்கூட பெரிதாக்கி, நாட்டில் ஒருவித அமைதியின்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன.

நமது கலாசார விழுமியங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கச் செய்து, அவற்றைப் பலவீனப்படுத்த பல சக்திகள் முயன்று வருகின்றன.

இந்தியா இன்னும் ‘விஸ்வகுரு’ ஆவதற்குத் தயாராகவில்லை. அதற்கான போதிய வலிமையும் கட்டமைப்புகளும் நம்மிடம் இல்லை. இந்தியாவிடம் புதிய வழியையும் தீர்வுகளையும் உலகம் எதிர்பார்க்கிறது.

மோகன் பகவத் - RSS
மோகன் பகவத் – RSS

ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு நம்மிடம் போதிய ஆயத்தப் பணிகள் இல்லை. ஒட்டுமொத்த சமுதாயமும் தங்களின் சொந்த அடையாளம் மற்றும் நாட்டின் நோக்கத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு, இந்தியா மற்றும் உலக நன்மைக்காக ஒன்றிணைந்து, சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய நேரம் இது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കരാറിലെ ഓരോ നിബന്ധനയും ഇസ്രഈലിന് അനുകൂലമെന്ന്; ബെയ്‌റൂട്ടില്‍ ഹിസ്ബുല്ല അനുകൂലികളുടെ പ്രതിഷേധം

ബെയ്‌റൂട്ട്: ഇസ്രഈലും ലെബനനും തമ്മില്‍ അമേരിക്കയുടെ മധ്യസ്ഥതയില്‍ വാഷിങ്ടണില്‍ ഒപ്പുവെച്ച കരാറിനെതിരെ...

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான...

Mohanlal: ‘ఏజ్‌ ఈజ్ జస్ట్‌ నంబర్‌’.. ఇద్దరు హీరోయిన్లతో డాన్స్ అదరగొట్టిన మలయాళి మెగాస్టార్.!

Mohanlal: మలయాళ మెగాస్టార్ మోహన్‌లాల్ మరోసారి డ్యాన్స్ మూవ్స్‌తో అభిమానులను ఆశ్చర్యపరిచారు....

ಬಿಡದಿ ಟೌನ್ ಶಿಪ್: ಸಿಎಂ  ಚಿಂತನೆ ಮಾಡಿ ಸೂಕ್ತ ನಿರ್ಧಾರ ಕೈಗೊಳ್ಳಲಿ- ಕೇಂದ್ರ ಸಚಿವ ವಿ.ಸೋಮಣ್ಣ

ದಾವಣಗೆರೆ,ಜೂನ್,27,2026 (www.justkannada.in): ಬಿಡದಿಯ ಟೌನ್ ಶಿಪ್ ನಿರ್ಮಾಣ ವಿಚಾರಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ...