19
November, 2025

A News 365Times Venture

19
Wednesday
November, 2025

A News 365Times Venture

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் – பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

Date:

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

ஜப்பான் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் பின் தங்கிய நாடுகளில் ஒன்று. முதன்முறையாக அங்கே ஒரு பெண் நாட்டை வழிநடத்தும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது மைல் கல் சாதனைப் போலத் தெரிந்தாலும் ஜப்பானில் உள்ள பெண்கள், பெண் விடுதலை செயற்பாட்டாளர்கள் இதில் மகிழ்ச்சியடையவில்லை என்பதே உண்மை.

Sanea Takaichi

ஏனென்றால் சனே தகைச்சி பழமைவாத கொள்கைகளைக் கடைபிடிப்பவர். அவரது சிந்தனைகளும் செயல்பாடுகளும் பெண்களை விட ஆண்களின் நலனையே பேணிக்காப்பதாக இருந்துள்ளது.

அசோசியேட்டட் பிரஸ் ஊடகம் கூறுவதன்படி ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகச் சிறிய அளவிலேயே அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சம உரிமை, சம அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர்.

ஜப்பான் நாடாளுமன்றத்திலும் மேலவை, கீழவை என இரு அவைகள் உள்ளன. அவற்றில் அதிகாரமிக்க கீழவையில் உள்ள உறுப்பினர்களில் 15% மட்டுமே பெண்கள். ஜப்பானில் உள்ள மொத்த 47 மாகாண கவர்னர்களில் ஓகே ஓகே ஓகே ஓகே.இருவர் மட்டுமே பெண்கள்.

Sanea Takaichi

என்னதான் தகைச்சி நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துவதாகக் கூறினாலும், கட்சியில் பெரும் சக்திகளாக இருக்கும் ஆண்களுக்கே அவரது விசுவாசம் உள்ளது என்பது அனைவருக்கும் கண்கூடு என்கின்றன ஊடகங்கள்.

பெண்கள் பற்றிய சனேவின் நிலைப்பாடு

கடந்த காலங்களில் பெண்களின் நலனுக்காக, பிரதிநிதித்துவத்துகாக முன்மொழியப்பட்ட கிட்டத்தட்டு அனைத்து சீர்திருத்தங்களையும் எதிர்த்திருக்கிறார் சனே. உதாரணமாக திருமணமான பெண்கள் தங்கள் குடும்ப பெயரை மாற்றாமல் இருப்பதற்கான முன்மொழிவை எதிர்த்தார். கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே குடும்ப பெயர் இல்லாமல் இருப்பது குடும்பத்தை சிதைத்துவிடும் என்றார்.

அரச குடும்பங்களில் பெண்களை வாரிசாக ஏற்கும் சட்டத்தை எதிர்த்தார். குடும்பங்கள்தான் சமூகத்தின் அலகு எனக் கூறும் அவர், பெண்களின் உரிமைக்கான பல திட்டங்களை குடும்பத்தை சிதைக்கும் எனக் கூறி எதிர்த்திருக்கிறார்.

சமூகத்தில் பெண்கள் நல்ல மனைவிகளாகவும் சிறந்த தாய்மார்களாகவும் இருப்பதே போதுமானது என்ற LDP கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர் சனே. மேலும் ஓர்பாலின உறவுகளையும் திருமணத்தையும் எதிர்த்து வருகிறார்.

Sanea Takaichi

இருந்தாலும் ஒரு பெண்ணாக தனது மெனோபஸ் காலத்தில் படும் அவதிகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் சனே. பள்ளிகளிலும் பணியிடத்திலும் ஆண்கள் சக பெண்களை சரியாக கவனித்துக்கொள்ள பெண்களின் உடல்நலம் சார்ந்து ஆண்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அரசியல் வெற்றி

சனே தனது இளம் வயதில் ஹெவி-மெடல் ராக் இசைக் குழுவில் ட்ரம்மராக இருந்துள்ளார். மோட்டார் பைக் ரைடராகவும் கலக்கியிருக்கிறார். 1973ம் ஆண்டு தனது 32 வயதில் சொந்த ஊரான நாராவிலிருந்து முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரையில் பொருளாதார பாதுகாப்பு, உள்துறை மற்றும் பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார்.

70 ஆண்டுகாலமாக ஜப்பானிய அரசியலில் ஒரே பெரும் சக்தியாக விளங்கும் LDP கட்சி சனேவின் மூலம் முதல் முறையாக ஒரு பெண்ணின் தலைமையை ஏற்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத சூழலில் கோமெய்டோ உள்ளிட்ட மையவாத கட்சிகளின் ஆதரவைப் பெற இந்த முடிவு அவசியமாகியிருக்கிறது..

எனினும் கட்சியின் பழமைவாத நிலைப்பாட்டினால் இது ஜப்பான் பெண்களுக்கு மிகப் பெரிய பலனை வழங்கிவிடாது என்கின்றனர் நிபுணர்கள். தனிப்பட்ட வகையில் ஒரு பெண்ணாக ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த கட்சியில் உயர் பொறுப்பை அடைந்துள்ளது சனே தகைச்சியின் சாதனை. வருகின்ற அக்டோபர் 15ம் தேதி சனே பிரதமராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.

சனே வலிமையான ராணுவம், வளர்ச்சிக்காக நிதிச் செலவை அதிகரிப்பது, அணுக்கரு தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல், சைபர் பாதுகாப்பை மேம்படுத்துதல், குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார் என்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ರೌಡಿ sahacharaninda ಜೀವ ಬೆದರಿಕೆ: cm ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ನವೆಂಬರ್,11,2025 (www.justkannada.in): ಕುರುಬರ ಸಂಘದ ವಿಚಾರದಲ್ಲಿ ಭಾಗಿ ಆಗದಂತೆ ನನಗೆ...

‘MAHAN’ ವತಿಯಿಂದ ನ.14 ರಂದು ಮೈಸೂರಿನಾದ್ಯಂತ ಸರಣಿ ಉಚಿತ ಆರೋಗ್ಯ ಶಿಬಿರ

ಮೈಸೂರು,ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ವಿಶ್ವ ಮಧುಮೇಹ ದಿನಾಚರಣೆ ಅಂಗವಾಗಿ ನವೆಂಬರ್ 14...

ಇನ್ನರ್ ವೀಲ್ ನ ಧ್ಯೇಯವಾಕ್ಯವೇ ಸ್ನೇಹ ಮತ್ತು ಸೇವೆ- ಶಬರೀಕಡಿದಾಳು

ಹುಣಸೂರು, ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ಇನ್ನರ್ ವೀಲ್ ವಿಶ್ವದ ಅತಿದೊಡ್ಡ ಮಹಿಳಾ...

ಪೊಲೀಸರು ಶಿಸ್ತು ಹಾಗೂ ರಕ್ಷಣೆಯ ಪ್ರತೀಕ -ಬಿ.ಚೈತ್ರ

ಮೈಸೂರು,ನವೆಂಬರ್,12,2025 (www.justkannada.in): ಪೊಲೀಸ್ ಎಂದರೆ ಶಿಸ್ತು ಹಾಗೂ ರಕ್ಷಣೆಯ ಪ್ರತೀಕ....