23
September, 2026

A News 365Times Venture

23
Wednesday
September, 2026

A News 365Times Venture

TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' – பனையூர் அப்டேட்

Date:

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கே.ஏ.அருண்ராஜ் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவிருப்பதாக கூறுகிறார்கள். அருண் ராஜ் சேலத்தை சேர்ந்தவர். மருத்துவம் பயின்றவர். கிருஷ்ணகிரியில் 5 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணியாற்றவும் செய்திருக்கிறார். சிவில் சர்வீசஸ் மீது கொண்ட ஈர்ப்பினால், 2009 இல் யூபிஎஸ்சி தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். IRS அதிகாரியாக பணிபுரிந்தாலும் அரசியல் மீதான ஆர்வமும் இருந்திருக்கிறது.

விஜய்

இங்கிருக்கும் அமைப்பின் சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவராக இருந்திருக்கிறார். இப்படியொரு நிலையில்தான் விஜய்யின் அறிமுகம் அருண்ராஜூக்கு கிடைக்கிறது. 2020 இல் விஜய்க்கு சில சிக்கல்கள் எழுந்திருக்கிறது . விஜய் அந்த சிக்கலிலிருந்து மீண்டு வர அருண் ராஜ் சில ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியதாக சொல்கிறார்கள். அதிலிருந்துதான் இருவருக்குமிடையேயான நட்பு தொடங்கியிருக்கிறது.

அப்போதிருந்தே விஜய்க்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். இப்போது விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருக்கு ஜான் ஆரோக்கியசாமியை விஜய்யிடம் அறிமுகப்படுத்தியதே அருண்ராஜ்தான் என்கிறார்கள்.

விஜய் கட்சிக்கான கொள்கை வடிவமைப்பிலிருந்து மாநாட்டு திட்டம் வரைக்கும் விஜய்யின் ஒவ்வொரு அரசியல் மூவிலும் அருண் ராஜின் பங்கு இருந்திருக்கிறது.

கடந்த மே 22 ஆம் தேதி அருண்ராஜின் விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இன்று பனையூரில் விஜய்யை சந்திக்கவிருக்கிறார் அருண்ராஜ். அவருக்கு மாநில அளவில் மிக முக்கிய பொறுப்பை விஜய் வழங்கவிருப்பதாகவும் தகவல் வருகிறது.

Vijay
Vijay

அதேமாதிரி, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜலெட்சுமியும் இன்று தவெகவில் இணையவிருப்பதாக சொல்கிறார்கள். மயிலாப்பூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான இவர் ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். அங்கிருந்து பா.ஜ.கவுக்கு தாவினார். பா.ஜ.கவிலிருந்து இப்போது தவெகவுக்கு வரவிருப்பதாக தகவல் சொல்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വിവാഹത്തിനും കുടുംബ ചടങ്ങിനും ഹെലികോപ്റ്റര്‍; മുഖ്യമന്ത്രിയെ പരിഹസിച്ച് വി. ശിവന്‍കുട്ടി

തിരുവനന്തപുരം: മുഖ്യമന്ത്രിയുടെ ചാര്‍ട്ടേഡ് വിമാനയാത്രയില്‍ പരിഹാസവുമായി മുന്‍ മന്ത്രി വി ശിവന്‍കുട്ടി....

`மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு; கடந்த 10 மாதங்களில் நடந்ததை மட்டும்..!' – ECI விளக்கம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார்...

Honda CB500 Launched in India: రాయల్ ఎన్‌ఫీల్డ్‌కు పోటీ..! హోండా CB500 విడుదల.. ధర, ఫీచర్లు ఇవే..

Honda CB500 Launched in India: ఎన్నో బైక్‌లు మార్కెట్‌ను ముంచెత్తినా.....

പിണറായി വിജയന്‍ പോയിട്ടില്ലേ, ഞാന്‍ ഇനിയും പോകും; പേരുവെളിപ്പെടുത്തേണ്ട ആവശ്യമില്ലെന്ന് വി.ഡി. സതീശന്‍

തിരുവനന്തപുരം: സ്വകാര്യവ്യക്തി അറേഞ്ച് ചെയ്ത വാഹനത്തിലാണ് യാത്ര ചെയ്തതെന്നും അതാരുടേതാണെന്ന് വെളിപ്പെടുത്തേണ്ട...