23
September, 2026

A News 365Times Venture

23
Wednesday
September, 2026

A News 365Times Venture

`மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு; கடந்த 10 மாதங்களில் நடந்ததை மட்டும்..!' – ECI விளக்கம்

Date:

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, ‘படிவம் 6’-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி பல உத்தரவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் முன்வைத்திருக்கின்றனர். மேலும், முக்கிய முடிவுகள் தங்கள் கவனத்திற்கு வராமலேயே எடுக்கப்படுவதாக இரு ஆணையர்களும் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

தேர்தல் ஆணையர்கள்; சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார், விவேக் ஜோஷி

இதனால், தேர்தல் ஆணையத்திற்குள் அதிகாரிகளிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து பரவலாக பொதுவெளிகளில் விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. அந்த விளக்கத்தில், “இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்பின் 324-வது பிரிவு மற்றும் சட்டப்பூர்வ விதிகளின் கீழ் இயங்கும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும். முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டப்பூர்வமான செயல்பாடுகளை உறுதி செய்யவே உட்புறக் கட்டுப்பாடுகளும் கருத்துப் பரிமாற்றங்களும் பின்பற்றப்படுகின்றன.

ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளும் 2023-ம் ஆண்டின் சட்ட நடைமுறைகளின்படியே எடுக்கப்படுகின்றன. வரைவு நிலைகளின் போது ஆணைய உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளும் ஆலோசனைகளும், வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தேர்தல் நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தவும் செய்யப்படும் வழக்கமான நிர்வாக நடவடிக்கைகளே ஆகும். எந்தவொரு அமைப்பிலும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பான ஒன்று. ஆணையர்கள் மட்டுமன்றி அனைத்து அதிகாரிகளுமே தேர்தல் முறையை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்க முழு அதிகாரம் பெற்றவர்கள்.

தேர்தல் ஆணைய அறிக்கை
தேர்தல் ஆணைய அறிக்கை

கடந்த 10 மாதங்களில் நடந்த சில குறிப்பிட்ட உட்புற விவாதங்களை மட்டும் முன்னிலைப்படுத்துவது முழுமையான உண்மையைக் காட்டாது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சீர்திருத்தங்கள் (SIR உட்பட) மற்றும் 40-க்கும் மேற்பட்ட புதிய முயற்சிகள் அனைத்தும், முழு ஆணையத்தின் ஏகமனதான ஒப்புதலுடனே எடுக்கப்பட்ட முடிவுகளாகும். மேலும், பல்வேறு மாநிலத் தேர்தல்களும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

ECI Net போன்ற ஆணையத்தின் டிஜிட்டல் தளங்கள் உயர்மட்ட இணையப் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழேயே இயங்குகின்றன. இதில் முறைகேடுகள் செய்ய முடியாது. மாவட்ட தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைவரும் சட்டப்படி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியே வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கப் பணிகளைச் செய்கின்றனர். இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு கடமைகளை முழுமையான நேர்மையுடன் நிறைவேற்ற என்றும் கடமைப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വിവാഹത്തിനും കുടുംബ ചടങ്ങിനും ഹെലികോപ്റ്റര്‍; മുഖ്യമന്ത്രിയെ പരിഹസിച്ച് വി. ശിവന്‍കുട്ടി

തിരുവനന്തപുരം: മുഖ്യമന്ത്രിയുടെ ചാര്‍ട്ടേഡ് വിമാനയാത്രയില്‍ പരിഹാസവുമായി മുന്‍ മന്ത്രി വി ശിവന്‍കുട്ടി....

Honda CB500 Launched in India: రాయల్ ఎన్‌ఫీల్డ్‌కు పోటీ..! హోండా CB500 విడుదల.. ధర, ఫీచర్లు ఇవే..

Honda CB500 Launched in India: ఎన్నో బైక్‌లు మార్కెట్‌ను ముంచెత్తినా.....

പിണറായി വിജയന്‍ പോയിട്ടില്ലേ, ഞാന്‍ ഇനിയും പോകും; പേരുവെളിപ്പെടുത്തേണ്ട ആവശ്യമില്ലെന്ന് വി.ഡി. സതീശന്‍

തിരുവനന്തപുരം: സ്വകാര്യവ്യക്തി അറേഞ്ച് ചെയ്ത വാഹനത്തിലാണ് യാത്ര ചെയ്തതെന്നും അതാരുടേതാണെന്ന് വെളിപ്പെടുത്തേണ്ട...

"IIT-களில் 45 மாணவர்கள் தற்கொலை; 62%க்கும் மேல் SC/ST/OBC மாணவர்கள்" – மாணிக்கம் தாகூர் கண்டனம்

"SC/ST/OBC மாணவர்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மோடி...