13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

ஆஜராகும் சீமான்; வளசரவாக்கத்தில் குவிந்த நாதக-வினர்… 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்க திட்டம்

Date:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தாக்கல் செய்த பாலியல் புகார் வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்துமாறு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டின் கேட்டில் போலீஸார் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர், அந்த நோட்டீஸ் கிழிக்கப்பட்ட விவகாரம் பிரச்சனையானது. அதில், சீமான் வீட்டின் பாதுகாவலரை போலீஸார் காரில் ஏற்றிச் சென்றனர்.

சீமான்

அதைத்தொடர்ந்து, தருமபுரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகிவிடுமா? உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.” என்று கூறினார்.

பிறகு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக சேலத்திலிருந்து இன்று சென்னை வந்திறங்கினார். சென்னை வந்ததும், வடபழனி தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் சீமான் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்ததும், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக மாலை 7:30 மணியளவில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து காரில் புறப்பட்டார்.

மறுபக்கம், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் குவிந்த நாம் தமிழர் கட்சியினரை தடுக்கும் வண்ணம், காவல் நிலையத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சீமான் ஆஜரான பிறகு விசாரணையில் அவரிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இன்று நள்ளிரவு தாண்டி விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமானின் மனைவியும் வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അഭിഭാഷകന്റെ പരാതി; യൂട്യൂബര്‍ തൊപ്പിക്കും സംഘത്തിനുമെതിരെ അന്വേഷണത്തിന് ഉത്തരവിട്ട് ഡി.ജി.പി

കൊച്ചി: യൂട്യൂബര്‍ തൊപ്പി എന്ന നിഹാദിനും സംഘത്തിനുമെതിരെ താന്‍ നല്‍കിയ പരാതിയില്‍...

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' – நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில்....

Family Suicide: ఇంత ఘోరమా? ముక్కుపచ్చలారని పసిబిడ్డల పట్ల విలన్‌గా మారిన తండ్రి

టూర్‌కు వెళ్దాం అంటే ఆ పిల్లలు సంతోషంతో తండ్రి వెంట వెళ్లారు....

ಬಿಡದಿ ಟೌನ್​ ಶಿಪ್​​​ ಗೆ​ ಅಂತಿಮ ಅಧಿಸೂಚನೆ ಪ್ರಕಟಿಸಿದ ಸರ್ಕಾರ

ಬೆಂಗಳೂರು, ಜೂನ್, 12,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯ ಸರ್ಕಾರವು  ಬಿಡದಿ ಟೌನ್...