4
November, 2026

A News 365Times Venture

4
Wednesday
November, 2026

A News 365Times Venture

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன்

Date:

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தது.

அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ள ஒரு தலைப்பில், நாடாளுமன்ற விதிகளுக்கும் மரபுகளுக்கும் புறம்பாக ஒன்றிய அமைச்சகம் இப்படி நிகழ்வுகளை நடத்துவது அதிகார வரம்பை மீறும் செயலாகும் எனவும் குறிப்பிட்டு மக்களவை சபாநாயகருக்கும் இளைஞர் நலன் அமைச்சகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இது குறித்துப் பதிவிட்டிருக்கும் அவர், “வெற்றி! ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாளை கல்லூரிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பானது எனச் சபாநாயகர், அமைச்சர் மற்றும் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

சு வெங்கடேசன்

இந்நிலையில் நாளை நடக்கவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை ரத்து செய்து கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇസ്‌ലാമോഫോബിയക്കെതിരായ ബില്‍, LGBT സപ്പോട്ടര്‍; ട്രംപിനെ അടിമുടി എതിര്‍ത്ത് വിജയിച്ച ഇല്‍ഹാന്‍ ഉമര്‍

വംശീയ അധിക്ഷേപങ്ങള്‍, ഇസ്‌ലാമോഫോബിക് പ്രചാരണം, വ്യക്തിപരമായ ആരോപണങ്ങള്‍, ഫെഡറല്‍ അന്വേഷണം… അമേരിക്കന്‍...

MPTC, ZPTC ఎన్నికలకు భారీ పోలీస్ బందోబస్తు.. డీజీపీ హరీష్ కుమార్ గుప్తా ప్రకటన

AP MPTC, ZPTC Elections: ఆంధ్రప్రదేశ్‌లో ఎంపీటీసీ, జడ్పీటీసీ ఎన్నికలు ప్రశాంతంగా,...

വിദ്യാർത്ഥികളോട് പ്രതികാരബുദ്ധി: കാലടി സർവ്വകലാശാല അധികൃതർക്കും സർക്കാരിനുമെതിരെ രൂക്ഷവിമർശനവുമായി ആർ. ബിന്ദു

തിരുവനന്തപുരം: കാലടി സംസ്കൃത സർവ്വകലാശാലയിലെ വിദ്യാർത്ഥി സമരവുമായി ബന്ധപ്പെട്ട് സർവ്വകലാശാല അധികൃതരും...

'நண்பா… நண்பீஸ் உங்களுக்கு அரசியல் வேண்டாம்!' – மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

தவெக கட்சி சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்...