2
November, 2026

A News 365Times Venture

2
Monday
November, 2026

A News 365Times Venture

“தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

Date:

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் போல, தமிழை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டிற்கும் ஒரு தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, “இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கென தனிக்கொடி இருக்கிறது. அதுபோல தேசியக் கொடிக்கு இணையாக தமிழ்நாட்டின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஒரு கொடி உருவாக்கப்பட வேண்டும். அந்த கொடியை ஜூலை 18 மற்றும் நவம்பர் 1 ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்களில் தமிழக முதலமைச்சரின் கரங்களால் முதன்முறையாக ஏற்றி வைக்க வேண்டும்.

முதல்வர் விஜய்

அந்த கொடி தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட வேண்டும். ஆங்கில வழிக் கல்வியில் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தை முதலில் மாற்ற வேண்டும். நமது குழந்தைகளுக்கு அன்னைத் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் தற்போதைய நிதர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை முதன்மைப்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സിദ്ധരാമയ്യ സ്റ്റിങ് ക്യാമറ ഓപ്പറേഷന്‍ വിവാദം: ഉപയോഗിച്ച ഫോണ്‍ കൈമാറിയത് കേന്ദ്രമന്ത്രിയുടെ വസതിയില്‍ വെച്ചാണെന്ന് റിപ്പോര്‍ട്ട്

ന്യൂദല്‍ഹി: കര്‍ണാടക മുന്‍ മുഖ്യമന്ത്രി സിദ്ധരാമയ്യയ്‌ക്കെതിരെ സ്റ്റിങ് ഓപ്പറേഷന്‍ നടത്താന്‍ ഉപയോഗിച്ച...

Yogi Adityanath: 1.27 కోట్ల మంది హిందువుల ఓట్లు గల్లంతు.. యోగి సంచలన వ్యాఖ్యలు..

Yogi Adityanath: ఉత్తర్ ప్రదేశ్ ఓటర్ల జాబితాలో భారీ సంఖ్యలో హిందువుల...

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா; திமுக கொண்டாட்டம்; லட்டுகளை தட்டோடு பறிமுதல் செய்த போலீஸ்

புதுக்கோட்டையில் ரூ.19 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்...