18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

Chennai Rain: 'தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!' – மேயர் பிரியா!

Date:

நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் களத்தில் சுற்றி சுழன்று வேலை பார்த்து மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் விஜய்யும் ரிப்பன் பில்டிங்கின் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், மேயர் பிரியா ஆய்வு கூட்டங்களுக்கு வருவதில்லை, மழை வெள்ளப் பணிகளில் ஈடுபடுவதில்லை என தவெகவினர் இணையத்தில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சில கேள்விகளோடு மேயர் பிரியாவையே தொடர்புகொண்டு பேசினோம்.

‘

CM Vijay

‘எல்லாரும் ஒரே இடத்தில் ஆய்வு செய்து பணி செய்ய வேண்டுமென்று இல்லை. அவர்கள் ஒரு பக்கம் வேலை செய்கிறார்கள். நாங்கள் ஒரு பக்கம் வேலை செய்கிறோம்’ என்றவர் தொடர்ந்து, ”தவெக அரசு மிகவும் மெதுவாக மழை வெள்ள பணிகளை மேற்கொள்கிறது. வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும்.

மாநகராட்சியுடன் மழை குறித்த ஆய்வு கூட்டத்தை ஆகஸ்ட்டிலேயே நடத்தியிருக்க வேண்டும். இவர்கள் அந்த ஆய்வுக் கூட்டத்தையே நான்கு நாட்களுக்கு முன்புதான் நடத்தியிருந்தனர். அதிலும் நாங்கள் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அடிப்படை விஷயங்களை பேசுகையில் தவெக எம்.எல்.ஏ போரடிக்குது என்கிறார். அவர்களின் அலட்சியமான அக்கறையற்ற போக்கு அதிலேயே வெளிப்பட்டது. இந்த அரசு மழைக்காக சில அடிப்படையான பணிகளையே தாமதமாகத்தான் தொடங்கியது. அதைக் குறிப்பிட்டு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டோம். அதிகாரிகளும் அமைச்சர்களும் மேயர், துணை மேயர் போன்றோரிடம் முறையாக கலந்தாலோசிப்பது இல்லை. அவர்களாக பணியை மேற்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் ஒரு பக்கம் பணிகளை ஆய்வு செய்து கூட்டங்களை நடத்துகின்றனர். நாங்கள் இன்னொரு பக்கம் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

மேயர் பிரியா
மேயர் பிரியா

மழைநீர் வடிகால் பணிகளுக்காக திமுக செலவு செய்த 4000 கோடி ரூபாய் வீண் என தவெகவினர் விமர்சனம் செய்கிறார்களே என்றதற்கு, ‘நேற்று சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனால், காலையில் மக்கள் பெரிய இடையூறுகளின்றி தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். தவெக ஆட்சியமைந்த நான்கு மாதங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு இதை சாதித்தார்களா? திமுக ஆட்சியில் செய்த பணிகளுக்கான பலன் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது’ என்றார் மேயர் பிரியா.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വോട്ട് മോഷണത്തിന് മോദിയും അമിത്ഷായും ഗ്യാനേഷും നിയമ നടപടി നേരിടേണ്ടി വരും: രാഹുല്‍ ഗാന്ധി

മഡ്ഗാവ്: വോട്ട് മോഷണം നടത്തിയതിന് പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിയും ആഭ്യന്തര മന്ത്രി...

CJP Protest: అభిజిత్ దీప్కే విడుదల.. సౌరవ్ దాస్, అశుతోష్ రంకా ఇంకా జైలులో ఎందుకు?

CJP Protest: కాక్రోచ్ జనతా పార్టీ(CJP) చీఫ్ అభిజిత్ దీప్కేను పోలీసులు...

സൗദി അധികൃതരുടെ മുന്നറിയിപ്പുകള്‍ പാലിക്കണം: ഇന്ത്യന്‍ പ്രവാസികള്‍ക്ക് നിര്‍ദേശങ്ങളുമായി എംബസി

റിയാദ്: സൗദി സഖ്യവും യെമനിലെ ഹൂത്തി വിമതരുമായുള്ള ഏറ്റുമുട്ടല്‍ തുടരുന്നതിനിടെ സൗദിയിലെ...

Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது....