25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

Vijay: "உதவியாளர் வீட்டு விழாவைச் சிறப்பிக்க பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா?" – இபிஎஸ்

Date:

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட 23 வயது விஷ்ணு என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பீர் பாட்டில் போன்றவற்றால் அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

crime

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

போதைப் பொருள் புழக்கத்தைத் தட்டிக் கேட்டால் கொலைதான் இந்த ஆட்சியில் பதிலா? இதுதான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப்படுகிறார்.

இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள்தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.

காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.

மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்?

உங்கள் உதவியாளர் வீட்டு விழாவைச் சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக்கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?

ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!

தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்?

ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?

இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று காட்டமாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ವಿದ್ಯುತ್ ತಂತಿಯ ಮೇಲೆ ನೇತಾಡುತ್ತಿರುವ ಅಪಾಯಕಾರಿ ಕೊಂಬೆ: ಅಧಿಕಾರಿಗಳ ನಿರ್ಲಕ್ಷ್ಯಕ್ಕೆ ಸಾರ್ವಜನಿಕರ ಆಕ್ರೋಶ

ಮೈಸೂರು, ಆಗಸ್ಟ್,24,2026 (www.justkannada.in):  ಮೈಸೂರಿನ ಚಾಮರಾಜಪುರಂ ಬಜ್ಜಣ್ಣ ಲೇನ್‌ನ ಕೊಪ್ಪಲು...

എച്ച് വണ്‍ ബി വിസക്ക് ഒരു ലക്ഷം ഡോളറിന് മുകളില്‍ സ്ഥിരം ഫീസ് ഈടാക്കാന്‍ യു.എസ് നീക്കം

വാഷിങ്ടണ്‍: യു.എസില്‍ എച്ച് വണ്‍ ബി വിസയ്ക്ക് ഒരു ലക്ഷം ഡോളറിന്...

திருவல்லிக்கேணி: ஒரு பகுதி… பல நினைவுச்சுவடுகள் – மெட்ராஸின் வரலாற்றைத் தாங்கும் மண்!

`திருவல்லிக்கேணி' விவேகானந்தர் முதல் பாரதியார் வரை... கண்ணகி முதல் உ.வே.சா வரை......

Bangladesh: హసీనా ఎఫెక్ట్.. బంగ్లా ప్రధాని భారత్ పర్యటనపై తర్జనభర్జన!

Bangladesh: వస్తే ఓ బాధ, రాకుంటే ఓ బాధ అన్నట్లు తయారైంది...