19
May, 2026

A News 365Times Venture

19
Tuesday
May, 2026

A News 365Times Venture

மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம் என்ன?

Date:

தமிழ்நாட்டில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும், 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக் கூடாது என அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் தமிழ்நாடு முதலைமைச்சர் விஜய். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 717 கடைகள் கணக்கெடுக்கப்பட்டு மூடப்படுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.  

பேருந்து நிலையம், பள்ளிக் கல்லூரிகள், கோயில்கள், மசூதி, தேவாலயங்களுக்கு அருகில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அதே இடங்களில் மனமகிழ் மன்றங்கள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால் மது குடிப்போர் அங்கு சென்று குடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை கோ.புதூர் பகுதியில் எப்.எல்.2 அனுமதி பெற்று ஒரு மனமகிழ்மன்றம் செயல்படுகிறது. அங்கு மதுபான விற்பனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

மதுக்கடைகள்

நேற்று காலை மன மகிழ் மன்றத்தில் மது வாங்குவதற்கு ஏராளமானோர் கூடியதால் அந்தப் பகுதியே பரபரப்பானது. ’உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது. அதனால் மது அருந்த வருபவர்கள் ஆதார் அட்டையைக் கொண்டு வாருங்கள் உங்களை உறுப்பினாராக்கி விட்டு பின்பு மது கொடுக்கிறோம்’ என மனமகிழ் மன்றத்தினர் கூறியுள்ளனர். அலட்டிக் கொள்ளாத மது குடிப்போரும் வீடுகளுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்து உறுப்பினராகி மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഉമര്‍ ഖാലിദിനും ഷര്‍ജീലിനും ജാമ്യം നിഷേധിച്ച വിധിയോട് വിയോജിച്ച് സുപ്രീംകോടതി

ന്യൂദല്‍ഹി: പൗരത്വ സമരകാലത്തെ കേസുകളില്‍ വിചാരണ തടവില്‍ കഴിയുന്ന ഉമര്‍ ഖാലിദിനും...

Iran: "கத்தார், சவுதி, அமீரகம் கேட்டுகொண்டதால் தற்காலிக போர் நிறுத்தம்; ஆனால்…"- ட்ரம்ப் அறிவிப்பு

"ஈரானுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு வேகமாகச்...

Deputy CM Pawan Kalyan: పంచాయతీరాజ్ శాఖలో ప్రత్యేక డ్యాష్‌బోర్డులు.. పవన్‌ కల్యాణ్‌ కీలక ఆదేశాలు..

Deputy CM Pawan Kalyan: అమరావతిలో పంచాయతీరాజ్ మరియు పంచాయతీరాజ్ ఇంజినీరింగ్...

ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಬದಲಾವಣೆಯಾದ್ರೆ ಪರಮೇಶ್ವರ್ ಸಿಎಂ ಆಗಲಿ- ಕೆ.ಎನ್ ರಾಜಣ್ಣ

ತುಮಕೂರು,ಮೇ,18,2026 (www.justkannada.in):  ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಬದಲಾವಣೆಯಾದರೇ ಗೃಹ ಸಚಿವ ಪರಮೇಶ್ವರ್...