19
May, 2026

A News 365Times Venture

19
Tuesday
May, 2026

A News 365Times Venture

'ரூ.2,500-க்கு வீட்டு வேலை டு மேற்கு வங்க எம்எல்ஏ' – பாஜக வேட்பாளர் கலிதா மாஜியின் வெற்றிக் கதை

Date:

மேற்கு வங்கத்தில் பாஜக பெற்றுள்ள மெகா வெற்றியில், ‘சைலண்ட்’ ஆக ஒரு சரித்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. கலிதா மாஜியின் வெற்றி இப்போதைய டாக் ஆஃப் தி நேஷன்!

யார் இந்த கலிதா மாஜி?

மேற்கு வங்கத்தின் அவுஸ்கிராம் தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கும் கலிதா மாஜி, வறுமை துரத்தினாலும், உழைப்பைக் கைவிடாமல், வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே தன் அரசியல் கனவுகளையும் நனவாக்கியிருக்கிறார்.

வெறும் 2,500 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த அந்தப் பயணம், இன்று எம்.எல்.ஏ சீட் வரை வந்து நிற்கிறது.

வேட்பு மனு தாக்கலின் போது கலிதா மாஜி

 தோல்வி தந்த பாடம்!

கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் கலிதா.

ஆனாலும் சோர்ந்து விடாமல், வீட்டு வேலை செய்துகொண்டே தன் தொகுதி மக்களுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதனால், இந்த முறை சுமார் 1,07,692 வாக்குகள் பெற்று, திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளர் ஷியாமா பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி, சட்டசபைக்குள் நுழையப்போகிறார் இவர்.

‘வீட்டு அடுப்பங்கரையில் வேலை பார்த்த கலிதா மாஜி, இனி சட்டசபையில் அமர்ந்து மக்களுக்காகப் பேசப்போகிறார்’ என்பதே இந்த ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த வெற்றி.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഒ.ബി.സി വിഭാഗങ്ങൾക്കുള്ള സംവരണം നിർത്തലാക്കി ബംഗാളിലെ ബി.ജെ.പി സർക്കാർ

കൊൽക്കത്ത: ഒ.ബി.സി വിഭാഗക്കാർക്കുള്ള സംവരണം നിർത്തലാക്കി ബംഗാളിൽ പുതുതായി അധികാരത്തിലേറിയ സുവേന്ദു...

ராகுல் காந்தி, பினராயி விஜயன் முன்னிலையில் வி.டி.சதீசன் கேரள முதல்வராக பதவியேற்பு Photo Album

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்...

Nalgonda: రక్తసంబంధానికే మాయని మచ్చ.. ఆస్తి కోసం ఎంత పని చేశారంటే..!

ఆస్తుల కోసం రక్త సంబంధీకులే పగవాళ్లుగా మారుతున్నారు. సొంత వారిని హత్య...