29
April, 2026

A News 365Times Venture

29
Wednesday
April, 2026

A News 365Times Venture

`அமித் ஷாவுடன் 45 நிமிடங்கள், இதைப்பற்றியெல்லாம் தான் பேசினோம்..!' – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

Date:

2021 சட்டமன்றத் தேர்தலில் ‘பா.ஜ.க’வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், “2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமித் ஷா உடனான சந்திப்புக் குறித்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம்” என்று கூ,றி கூட்டணி பற்றி பேசவில்லை என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘ഇങ്ങനെയാണ് അവര്‍ തെരഞ്ഞെടുപ്പ് ജയിക്കുന്നത്’; തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസ് വോട്ടിങ് മെഷീനില്‍ കൃത്രിമം കാണിച്ചെന്ന് ബി.ജെ.പി

കൊല്‍ക്കത്ത: പശ്ചിമ ബംഗാള്‍ നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പില്‍ തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസ് വോട്ടിങ് മെഷീനില്‍...

UAE வெளியேறியது இருக்கட்டும்; OPEC என்றால் என்ன? அதன் பணி என்ன? – தெரிந்துகொள்வோம் வாங்க!

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு...

Supplementary exams: పది ఫెయిల్ అయిన విద్యార్థులకు అలర్ట్.. జూన్ 5 నుంచి పరీక్షలు..

పదో తరగతి ఫలితాల వెల్లడి తర్వాత, ఉత్తీర్ణత సాధించని విద్యార్థుల కోసం...

ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರ ಶಕ್ತಿ ಪ್ರದರ್ಶನ ಅಲ್ಲ, ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರೇ ಒಂದು ಶಕ್ತಿ – ಸಚಿವ HC ಮಹದೇವಪ್ಪ

ನವದೆಹಲಿ,ಏಪ್ರಿಲ್,29,2026 (www.justkannada.in): ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರ ಶಕ್ತಿ ಪ್ರದರ್ಶನ ಅಲ್ಲ, ಸಿದ್ದರಾಮಯ್ಯ...