23
October, 2026

A News 365Times Venture

23
Friday
October, 2026

A News 365Times Venture

புதிய தலைமைச் செயலகம்: 'தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?'- கனிமொழி கேள்வி

Date:

“தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” என்று திமுக எம்.பி கனிமொழி ஆளும் தவெக அரசை நோக்கி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இட நெருக்கடியான மற்றும் கடல் வளம் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது என தங்களது கண்டனத்தை எதிர்க்கட்சிகள் பதிவு செய்தனர்.

மேலும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

முதல்வர் விஜய் – புதிய தலைமைச் செயலகம்

இப்படி புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக தொடர் அதிருப்திகள் இருந்துவரும் சூழலில், புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்தது யார் என RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தங்களிடம் விவரங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு பதில் கொடுத்திருக்கிறது.

பட்டினப்பாக்கம் இடத்தேர்வு குறித்த RTI கேள்விக்கு அரசிடம் பதிலில்லாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் திரு.விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കന്നുകാലികളെ ബാധിക്കുന്ന ഷമോണ്ട വൈറസ് ബാധിച്ച് ഒരു മരണം: പൊതുജനങ്ങള്‍ക്ക് ആരോഗ്യപരമായ ഭീഷണിയില്ലെന്ന് ഫ്രഞ്ച് സര്‍ക്കാര്‍

ജനീവ: കന്നുകാലികളെ ബാധിക്കുന്ന ഷമോണ്ട വൈറസ് ആദ്യമായി മനുഷ്യനില്‍ കണ്ടത്തിയതായി ലോകാരോഗ്യ...

CJP: అశుతోష్ రాంకా, సౌరవ్ దాస్‌లకు బిగ్ రిలీఫ్..!

CJP: కాక్రోచ్ జనతా పార్టీ (CJP) నాయకులు సౌరవ్ దాస్, అశుతోష్...

മോഷണത്തിനായാണ് തന്നെ വിളിച്ചതെന്ന് അറിയില്ലായിരുന്നു: പെട്ടുപോയതാണെന്ന് കെ.എം.സി.സി കവര്‍ച്ചയില്‍ കീഴടങ്ങിയ ബി.ജെ.പി നേതാവ്

കോഴിക്കോട്: ജോലി വാഗ്ദാനം ചെയ്താണ് തന്നെ കൊണ്ടുപോയതെന്നും മോഷണമാണ് ഉദ്ദേശമെന്ന് അറിയില്ലായിരുന്നു...

“ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துள்ளது, மிகப்பெரிய தலைகுனிவு" – சீமான்

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக காவல்துறை கொடி நாள் பேட்ஜில் தமிழைத்...