19
March, 2025

A News 365Times Venture

19
Wednesday
March, 2025

A News 365Times Venture

Tulsi Gabbard: அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி! – யார் இந்த துளசி கபார்ட்?

Date:

அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கபார்டை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடி  இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கபார்டை சந்தித்து பேசியிருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். “அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கபார்டை நான் வாஷிங்கடன்னில் சந்தித்தேன். அவருடன் இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்தேன்.

நரேந்திர மோடி-துளசி கபார்ட்

இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன்” என்று மோடி அவரது பதிவில் தெரிவித்திருந்தார். 

யார் இந்த துளசி கபார்ட்?

43 வயதாகும் துளசி கபார்ட் தனது 21 வயதில் ஹவாய் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். துளசி என்ற பெயரையும் அவரது சமயத்தையும் வைத்து அவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நினைப்போம். ஆனால் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல. 

துளசி கபார்ட்

துளசியின் குடும்பம் அமெரிக்காவில் அரசியல் பின்புலம் கொண்டது. அவரது தந்தை ஹவாய் மாநில செனட்டர் மைக் கபார்ட், அம்மா கரோல் போர்ட்டர் கபார்ட். அவரது அம்மா கரோல் போர்ட்டர் கபார்ட், அமெரிக்காவின் ஹரே கிருஷ்ணா இயக்கம் வளர்ச்சியடைந்தபோது இந்துவாக மதம் மாறியவர். அவரது ஐந்து குழந்தைகளுக்கும் நாராயண், விருந்தாவன், பக்தி, துளசி, ஜெய் என இந்து பெயர்களை சூட்டி இருக்கிறார். 

தாயின் வழியைப் பின்பற்றி டீன் ஏஜ் முதல் இந்து சமயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் துளசி. 2015ம் ஆண்டு ஆபிரகாம் வில்லியம்ஸ் என்ற திரைப்பட இயக்குநரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணமும் இந்து முறைப்படியே நடைபெற்றது. 2003ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த சில ஆண்டுகள் அமெரிக்க இராணுவ தேசிய காவலர் பிரிவில் பணியாற்றியிருக்கிறார்.

துளசி கபார்ட்

அரசியலில் வளர்ந்த துளசி, 2016ம் ஆண்டு ஜனநாயக கட்சியிலிருந்து குடியரசுக் கட்சிக்கு மாறினார். தற்போது ட்ரம்ப்பின் நம்பிக்கையைப் பெற்று, அமெரிக்க உளவுத்துறை தலைவர் (National Intelligence Director – DNI) என்ற உயர் பதவியை அடைந்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಪಿ.ಯು. ಉಪನ್ಯಾಸಕರ ಸಂಘದ ಅಧ್ಯಕ್ಷರಿಂದ ನಕಲಿ ದಾಖಲೆ ಸಲ್ಲಿಕೆ ಆರೋಪ.?

ಮೈಸೂರು, ಮಾ.18, 2025:  ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯ ಪದವಿ ಪೂರ್ವ ಕಾಲೇಜುಗಳ...

നിയമവിരുദ്ധമായി പ്രവര്‍ത്തിക്കുന്നെന്ന് ആരോപിച്ച് ഉത്തരാഖണ്ഡിലെ 84 മദ്രസകള്‍ അടച്ചുപൂട്ടി ബി.ജെ.പി സര്‍ക്കാര്‍

ഡെറാഡൂണ്‍: നിയമവിരുദ്ധമായി പ്രവര്‍ത്തിക്കുന്നുവെന്ന് ആരോപിച്ച് ഉത്തരാഖണ്ഡിലെ 84 മദ്രസകള്‍ അടച്ചുപൂട്ടി ബി.ജെ.പി...

`ஊதியம் கிடையாது' – போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பகுதி நேர ஆசிரியர்கள்...

Atreyapuram Pootharekulu: ఆత్రేయపురం కల్తీ నెయ్యి ఘటన.. ల్యాబ్ పరిశీలనలో వెలుగులోకి కీలక వాస్తవాలు!

అంబేద్కర్ కోనసీమ జిల్లా ఆత్రేయపురంలోని కొన్ని పూతరేకుల దుకాణాల్లో వాడింది కల్తీ...