31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

ஸ்டாலின் பாதுகாப்பு Z+-ல் இருந்து Z ஆக குறைப்பு; காரணம் என்ன?

Date:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினின் பாதுகாப்பு Z+ பிரிவிலிருந்து Z ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Z+ பிரிவின் கீழ், குறிப்பிட்ட நபரின் பாதுகாப்பிற்காகச் சுழற்சி முறையில் கிட்டத்தட்ட 50 கமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் பிரிவு போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.

துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன், குண்டுதுளைக்காத வாகனம் மற்றும் சிக்னல் ஜாமர் வசதியும் வழங்கப்படும். இந்தப் பாதுகாப்புதான் ஸ்டாலினுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

ஸ்டாலின் – திமுக

இப்போது வழங்கப்பட்டிருக்கும் Z பிரிவு பாதுகாப்பின் கீழ், ஸ்டாலினுக்கு 22 காவலர்கள் வரை பணியில் இருப்பார்கள்.

ஏன் இந்த முடிவு?

மத்திய, மாநில உளவுத்துறைகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

அந்த ஆய்வின் தற்போதைய அறிக்கையின்படிதான், ஸ்டாலினுக்கு Z+ பிரிவு பாதுகாப்பிலிருந்து Z பிரிவு பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்பு மாற்றம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" – தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட...

Bilawal Bhutto: యూరప్ యువరాణితో బిలావల్ భుట్టో పెళ్లి! సోషల్ మీడియాలో వైరల్

పాకిస్థాన్ పీపుల్స్ పార్టీ చైర్మన్, పాకిస్థాన్ మాజీ విదేశాంగ మంత్రి బిలావల్...

ഖാര്‍ഗെ സംസാരിച്ച വേദി ശുദ്ധീകരിച്ച വിവാദം; കേസെടുക്കാന്‍ ആവശ്യപ്പെട്ട രാഹുല്‍ ഗാന്ധിക്കെതിരെ എസ്.സി-എസ്.ടി പ്രകാരം എഫ്.ഐ.ആര്‍

ഡെറാഡൂണ്‍: കോണ്‍ഗ്രസ് അധ്യക്ഷന്‍ മല്ലികാര്‍ജുന്‍ ഖാര്‍ഗെ സംസാരിച്ച വേദി ശുദ്ധീകരിച്ച സംഭവത്തില്‍...

"ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காத்து வாங்கியது" – எடப்பாடி பழனிசாமி பேச்சு

"சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள்...