19
October, 2026

A News 365Times Venture

19
Monday
October, 2026

A News 365Times Venture

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது; கடுமையான நடவடிக்கை உண்டு' – இம்மானுவேல் மக்ரோன்!

Date:

விலைவாசி உயர்வு, மோசமான கல்விச் சூழல் போன்றவற்றைக் கண்டித்து பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது ஆங்காங்கே கலவரமும், கடைகளில் சூறையாடலும் நிகழ்ந்துள்ள நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “நாடு முழுவதும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மானுவேல் மக்ரோன்

பொதுச் சொத்துக்களைச் சூறையாடியவர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்கியே ஆக வேண்டும். நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முயன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். தீவிர இடதுசாரி அமைப்புகளின் தூண்டுதலாலும், அவர்களுடன் கைக்கோத்த குற்றவாளிகளாலுமே இந்த வன்முறைகள் வெடித்துள்ளது. வரும் வாரங்களில் பொதுக் கட்டடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களைப் பாதுகாக்க மேயர்களுடன் இணைந்து செயல்படவும், தேவைப்பட்டால் போராட்டங்களுக்குத் தடை விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் போராட்டத்தின் போது, மத்திய பிரான்ஸில் உள்ள லிமோஜஸ் (Limoges) நகரில் அமைந்துள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நகர மன்றக் கட்டடம் (City Hall) போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இதில் அதன் கூரை இடிந்து விழுந்து, கட்டடம் பலத்த சேதமடைந்தது. பாரிஸ், மார்சேய், லியோன் மற்றும் போர்டோ போன்ற முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. அரசின் கணக்குப்படி சுமார் 5.5 லட்சம் மக்களும், அமைப்பாளர்களின் கூற்றுப்படி 8 லட்சம் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிரான்ஸ் போராட்டம்
பிரான்ஸ் போராட்டம்

தலைநகர் பாரிஸில் உள்ள ‘பிளேஸ் டி லா ரெபப்ளிக்’ பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டதால் பெரும் பதற்றம் நிலவியது. கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
பாரிஸின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ், “போராட்டம் நடத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால், வன்முறை மூலம் திட்டமிட்டு அமைதியைச் சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.
பாரிஸின் பிரதான வீதிகளில் கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, கற்கள் சிதறிப்போய்க் கிடக்கின்றன.

பாரிஸ் பிராந்தியத்தில் மட்டும் 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தேசியச் சின்னமான ‘மரியான்’ (Marianne) சிலையின் அடிப்பகுதியும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் இந்த மோசமான நிலையைப் பார்த்துப் பல மூத்த குடிமக்கள் கண்ணீர் விட்டு வேதனை தெரிவித்துள்ளனர். வன்முறையாளர்கள் உள்ளே புகுந்ததால், முறையான கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு அமைதியான போராட்டம் தற்போது அதன் நோக்கத்தை இழந்துவிட்டதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் போராட்டம்
பிரான்ஸ் போராட்டம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு, இச்சம்பவம் பிரான்ஸ் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மக்ரோனின் மத்தியவாத அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது என்றும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லீ பென் விமர்சித்துள்ளார். அதேவேளையில், தீவிர இடதுசாரித் தலைவரான ஜீன்-லூக் மெலன்சோன், பிரதமரின் தவறான அணுகுமுறையே இளைஞர்களையும் தொழிற்சங்கங்களையும் ஒன்றாகத் திரட்டியுள்ளது என்றும், இருப்பினும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “பிரான்ஸ் எரிகிறது! எல்லைகளை மூடி உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், பிரான்ஸ் அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த வன்முறைக்கு இடதுசாரி அமைப்புகளும் வன்முறையாளர்களுமே காரணம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പ്രതിഷേധങ്ങളില്‍ കത്തുന്ന ഫ്രാന്‍സ്: അക്രമങ്ങളില്‍ ലജ്ജയും രോഷവുമെന്ന് ഇമ്മാനുവേല്‍ മാക്രോണ്‍

പാരിസ്: റിപബ്ലികിനെ താഴെയിറക്കാനുള്ള അക്രമാസക്തമായ പ്രതിഷേധ ശ്രമങ്ങളില്‍ രോഷം പ്രകടിപ്പിച്ച് ഫ്രാന്‍സ്...

അശുതോഷിന്റെയും സൗരവിന്റെയും ജാമ്യം വൈകിപ്പിക്കാന്‍ ആസൂത്രിത നീക്കം: സി.ജെ.പി

ന്യൂദല്‍ഹി: സി.ജെ.പി നേതാക്കളായ അശുതോഷ് രങ്കയുടെയും സൗരവ് ദാസിന്റെയും ജാമ്യം വൈകിപ്പിക്കാന്‍...

Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின்...