6
July, 2026

A News 365Times Venture

6
Monday
July, 2026

A News 365Times Venture

'தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்?'- அதிமுக எம்.பி இன்பதுரை

Date:

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து புகார் அளித்திருக்கின்றனர்.

குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்திருக்கின்றனர்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக எம்.பி இன்பத்துரை, ” எங்களின் புகாரில் ஆளுநர் உரிய நடடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்? அதை அனுமதிக்க மாட்டேன் என தவெக ஆட்சி அமைக்கும் முன்பே அவர் கூறியிருந்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.

குதிரை பேரம் நடைபெறுவது அப்பட்டமாக தெரிந்தும் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். குதிரை பேரம் மிகவும் ஆபத்தானது. அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது” என்று கூறியிருக்கிறார்.

அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி
அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலில் ஆளுநரை சந்தித்துள்ளோம்.

அதிமுக எம்எல்ஏ-களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தவெக. ஆளுநரின் அதிகாரத்தின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യു.എസുമായി ഇറാന്‍ സമാധാനത്തിലല്ല; ധാരണാപത്രം നടപ്പാക്കുന്നത് പ്രയാസമെങ്കിലും അസാധ്യമല്ലെന്ന് ഖാലിഭാഫ്

ടെഹ്‌റാന്‍: ഇറാന്‍-യു.എസ് ധാരണാ പത്രത്തിലെ വ്യവസ്ഥകള്‍ നടപ്പാക്കുന്നത് പ്രയാസകരമാണെങ്കിലും അസാധ്യമല്ലെന്ന് ഇറാന്‍...

'காமேனியின் இறுதிச் சடங்கிலேயே ஈரான் தலைவர்களை ஒழித்துவிட முடியும்'- ட்ரம்ப் பேச்சு; ஈரான் பதிலடி!

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி...

Eluru: తీవ్ర విషాదం.. రైలు ఢీకొని ఒకే కుటుంబానికి చెందిన నలుగురు మృతి!

Eluru: ఏలూరు జిల్లా చేబ్రోలు రైల్వే స్టేషన్ సమీపంలో శనివారం రాత్రి...

‘അധികാരത്തിലുള്ളത് ഹിന്ദുക്കളെ കൊള്ളയടിക്കുന്നവര്‍’; രാമക്ഷേത്ര തട്ടിപ്പില്‍ കേന്ദ്രത്തിനെതിരെ ഉദ്ധവ് താക്കറെ

മുംബൈ: അയോധ്യ രാമക്ഷേത്ര ഫണ്ട് തട്ടിപ്പില്‍ കേന്ദ്ര സര്‍ക്കാരിനും ബി.ജെ.പിക്കുമെതിരെ വീണ്ടും...