27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

முரண்டு பிடிக்கும் மம்தா; 'ராஜினாமா செய்ய வேண்டும் என்பது கட்டாயமா?' அரசியல் சாசனம் சொல்வது என்ன?

Date:

2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு ‘எண்ட் கார்டு’ எழுதியுள்ளது பாஜக.

மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிப்பூர் தொகுதியிலேயே 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஆனால், இப்போது திரிணாமுல் தோல்விக்கு பாஜக காரணம், சிறப்பு தீவிர திருத்தம் காரணம் என்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதில் முரண்டு பிடித்து வருகிறார் மம்தா.

மம்தா பானர்ஜி

அரசியலமைப்பு சாசனத்தின் படி, மம்தா முடிவுக்கு என்ன பதில் என்பதை பார்க்கலாம்.

அரசியலமைப்பு சாசனம் பிரிவு 164-ன் படி, சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும் வரை, ஒருவர் முதலமைச்சராக இருக்கலாம்.

ஆனால், பெரும்பான்மையை இழக்கும் போது, அரசியல் சாசனத்தின் படி, அந்த ஆட்சி முடிவடைந்து விடுகிறது.

அதன் பிறகு, பெரும்பான்மை இருக்கும் நபரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில், அமைச்சர்களை ஆளுநர் நியமிப்பார்.

ஆனால், பெரும்பான்மை இல்லாத முன்னாள் முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சட்டமாக இல்லை. அது வெறும் வழக்கம் தான்.

நாகரிகம் கருதி, இதுவரை பெரும்பான்மை பெற தவறும்போது, முதலமைச்சர் ஆளுநரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்குவார்கள்.

ஒருவேளை, முன்னாள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவோ… பதவியில் இருந்து இறங்கவோ மறுக்கும்போது, அவரை ஆளுநர் பதவி நீக்கம் செய்யலாம்.

ஆளுநருக்கு இந்த உரிமையை பிரிவு 164-ல் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘விருப்புரிமையின் படி’ என்கிற வார்த்தை தருகிறது என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರು ದಸರಾ 2026: ಗಜಪಯಣಕ್ಕೆ ಅದ್ದೂರಿ ಚಾಲನೆ

ಮೈಸೂರು,ಆಗಸ್ಟ್, 26,2026 (www.justkannada.in): ವಿಶ್ವವಿಖ್ಯಾತ ಮೈಸೂರು ದಸರಾ ಮಹೋತ್ಸವದ ಪೂರ್ವಭಾವಿ...

യു.എന്‍.ആര്‍.ഡ.ബ്ല്യു.എ പരിശീലന കേന്ദ്രം പിടിച്ചെടുത്ത ഇസ്രഈല്‍ നടപടിയെ അപലപിച്ച് ബ്രിട്ടിഷ് മന്ത്രി

ജെറുസലേം: യു.എന്‍ ഏജന്‍സിയായ യുനൈറ്റഡ് നേഷന്‍സ് റിലീഫ് ആന്‍ഡ് വര്‍ക്‌സ് ഏജന്‍സി...

Nepal Flood: நேபாளத்தில் கடும் வெள்ள பெருக்கு; பலி எண்ணிக்கை 46-ஆக அதிகரிப்பு!| Live Updates

நேபாளத்தில் கடும் வெள்ளம் - முதல்வர் அறிக்கை!நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு...

IISc Study: ఆవు ఎంజైమ్‌తో ప్రమాదకర బ్యాక్టీరియాకు చెక్.. IISc సంచలన పరిశోధన

IISc Study:  ఇండియన్ ఇన్‌స్టిట్యూట్ ఆఫ్ సైన్స్ (IISc) శాస్త్రవేత్తలు పరిశోధన...