24
November, 2026

A News 365Times Venture

24
Tuesday
November, 2026

A News 365Times Venture

'திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!' – தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்!

Date:

கார்த்திகை தீப தினமான நாளை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது நில அளவைக் கல்தான் என தமிழக அரசு சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறது.

அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்

“தமிழ்நாட்டில் உள்ள மாபெரும் முக்கோண அளவை நிலையங்களின் ஆவணப்படுத்தல்” (Documentation of The Great Trigonometrical Survey Stations (GTS) in Tamil Nadu – Summary) என்ற அறிக்கையின் சுருக்கமாகும். தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை மற்றும் தொல்லியல் துறை ஆகியவை இணைந்து (மற்றும் வருவாய், வனத் துறைகளுடன் இணைந்து) இந்த தரவுகளை வெளியிட்டிருக்கின்றன.

அதன்படி திருப்பரங்குன்றத்தை போல தமிழகத்தில் 800 க்கும் அதிகமான நிலஅளவைக் கல்கள் பல இடங்களில் இருப்பதாகவும், அதில் 484 நில அளவை கற்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நில அளவைக் கற்கள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பதையும் புகைப்பட ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்
அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்

நாளை கார்த்திகை தீபம் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் டிஜிபி மகேஸ்குமார் அகர்வால், அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதைத் தொடர்ந்தே இந்தத் தரவுகள் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், நாளை திருப்பரங்குன்றத்தில் அரசு என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

December 2026 Sun Transit: డిసెంబర్‌లో సూర్యుడి నక్షత్ర మార్పు.. ఏ రాశులకు డబ్బు, అదృష్టం.?

2026 చివరి నెలైన డిసెంబర్ జ్యోతిష్య పరంగా చాలా స్పెషల్‌గా ఉండబోతోంది....

കൂറുമാറുന്ന ജനപ്രതിനിധികള്‍ അയോഗ്യത ഒഴിവാക്കാന്‍ രാജിവെക്കുന്നത് തടയാന്‍  ഹരജി: കേന്ദ്രത്തിനും തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷനും നോട്ടീസ് 

ന്യൂദല്‍ഹി: കൂറുമാറ്റ നിരോധന നിയമപ്രകാരം അയോഗ്യതയില്‍ നിന്നും രക്ഷപ്പെടാനായി എം.എല്‍.എമാരും എം.പിമാരും...

'திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!' – எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதி!

தவெகவின் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து...

TDP : ఏపీలో 7 డిప్యూటీ మేయర్లు, 59 వైస్ చైర్‌పర్సన్ల జాబితా విడుదల..

ఆంధ్రప్రదేశ్‌లోని పట్టణ స్థానిక సంస్థలకు సంబంధించి డిప్యూటీ మేయర్లు, మున్సిపల్ వైస్...