25
November, 2026

A News 365Times Venture

25
Wednesday
November, 2026

A News 365Times Venture

'திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!' – எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதி!

Date:

தவெகவின் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆலோசித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் போன்றவை குறித்தும் முதல்வர் விஜய் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

விஜய்

முதல்வருடனான இந்த ஆலோசனைக் கூட்டத்யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் லதா, செல்லச்சாமி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இவர்களிடம் மட்டும் முதல்வர் 20 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

இருவரும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னை, வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு போன்றவை குறித்து முதல்வரிடம் விளக்கியிருக்கின்றனர். அதையெல்லாம் கேட்டு முதல்வரும் தனது டைரியில் குறிப்பெழுதியிருக்கிறார். இதன் பின்னர்தான் பொதுவான விஷயங்களை பேசியிருக்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக வழக்கமாக எங்கே தீபம் ஏற்றப்படுமோ அங்கே மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இந்து அமைப்புகள் கோரும் இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என லதா கூறியிருக்கிறார்.

சி.பி.எம் எம்.எல்.ஏக்கள்
சி.பி.எம் எம்.எல்.ஏக்கள்

அதற்கு விஜய், ‘உங்க நிலைப்பாடுதான் எங்க நிலைப்பாடும். கவலைப்படாதீங்க’ எனக் கூறியிருக்கிறார்.

அதேபோல, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பற்றி சொன்ன போதும், ‘அந்த விவகாரத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். தவறு நடந்திருந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம்’ எனக் கூறியிருக்கிறார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது எனக் கூறியதற்கும், ‘எங்கே எந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும் தீவிர நடவடிக்கை எடுப்போம்’ எனக் கூறியிருக்கிறார்.

தளி ராமச்சந்திரன் சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி கேட்கையில், ‘இன்னும் 3 மாதத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்’ என முதல்வர் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

തിരുപ്പറങ്കുണ്ഡ്രം: ദര്‍ഗയ്ക്ക് സമീപമുള്ള കല്‍ത്തൂണില്ല; വിളക്ക് തെളിയിച്ചത് സ്ഥിരം സ്ഥലത്ത്

മധുരൈ: മധുരൈയിലെ തിരുപ്പറങ്കുണ്ഡ്രം മലമുകളിലെ സിക്കന്ദര്‍ ദര്‍ഗയ്ക്ക് സമീപമുള്ള കല്‍ത്തൂണില്‍ കാര്‍ത്തിക...

Kallakurichi TVK MLA: விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி; யார் இந்த சிருஷ்டி சிங் IPS?

தமிழ்நாட்டு அரசியலையும் தாண்டி இந்திய அளவில் அரசு நிர்வாக அதிகாரிகளின் மத்தியிலும்...

CM Revanth Reddy : భూసేకరణ లెక్కలతో కేసీఆర్‌పై రేవంత్ ఫైర్.. పాలమూరు–రంగారెడ్డిపై సంచలన వ్యాఖ్యలు

కృష్ణా జలాలు, సాగునీటి ప్రాజెక్టుల భూసేకరణపై ముఖ్యమంత్రి రేవంత్ రెడ్డి మాజీ...

മോദി ഭരണം ഇന്ത്യന്‍ ജനാധിപത്യ സ്ഥാപനങ്ങളെ ദുര്‍ബലപ്പെടുത്തുന്നു: ഹ്യൂമന്‍ റൈറ്റ്‌സ് വാച്ച് റിപ്പോര്‍ട്ട്

ലണ്ടന്‍: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയുടെ നേതൃത്വത്തിലുള്ള ഹിന്ദുത്വ ദേശീയവാദ സര്‍ക്കാര്‍ ഇന്ത്യയിലെ മനുഷ്യാവകാശങ്ങളും ജനാധിപത്യ...