20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

ஊடகவியலாளர் அருண் ராம்: “இது பாசிசமா பாயாசமா?" – முதல்வர் விஜய்யிடம் கேள்வி எழுப்பும் ஸ்டாலின்!

Date:

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் ஆசிரியர்களில் ஒருவரான அருண் ராம், `Hero’s silence, party’s shame: Joseph Vijay’s reluctance to reign in unruly elements is harming TVK and govt’ என்ற தலைப்பில், “தமிழ்நாட்டில் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தவெக நிர்வாகிகளின் பட்டியல் அதிகரித்து வருவது ஒரு சங்கடமான கேள்வியை எழுப்புகிறது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது சொந்தக் கட்சியைப் பொறுப்பேற்கச் செய்யத் தயாராக இருக்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பி நீண்டக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

முதல்வர் விஜய்

அதைத் தொடர்ந்து அருண் ராம் தன் எக்ஸ் பக்கத்தில், “கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் த.வெ.க (TVK) நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து நான் எழுதிய கட்டுரை வெளியான அடுத்த நாளே, இன்ஸ்டாகிராமிலிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதில், இந்தப் பதிவு (ஜூலை 21 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா (TOI) குழு முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படங்கள்) “சட்டப்பூர்வ தேவைகளுக்கு இணங்க” இந்தியாவில் கிடைக்கப்பெறாது (முடக்கப்பட்டுள்ளது) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #interesting” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார்.” என எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “இது பாசிசமா பாயாசமா?: டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது?

தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தமிழ்நாடு முதலீட்டு தகவல்கள் கசிவு: 15 பேரை அதிரடி நீக்கம் செய்த அமைச்சர் கீர்த்தனா?

தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பான 'தமிழ்நாடு வழிகாட்டி' (Guidance...

AP Police: ఏపీ పోలీసుల సంచలన ఆపరేషన్.. మారేడుమిల్లి అడవుల్లో మావోయిస్టు డంప్ స్వాధీనం..

ఆంధ్రప్రదేశ్ పోలీసుల సమర్థవంతమైన చర్యలతో మావోయిస్టులకు గట్టి ఎదురుదెబ్బ తగిలింది. వామపక్ష...

ടൂറിസ്റ്റ് ബസ്സുകള്‍ക്ക് ഇനി ഇഷ്ടമുള്ള നിറം; ബസുകളുടെ ഏകീകൃത വെള്ളനിറം പിന്‍വലിച്ച് ഹൈക്കോടതി

കൊച്ചി: സംസ്ഥാനത്തെ ടൂറിസ്റ്റ് ബസുകള്‍ക്കുള്ള ഏകീകൃത വെള്ളനിറം പിന്‍വലിച്ചു. മുന്‍ ഉത്തരവ്...

“`Start, Camera, Action' என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்"- எடப்பாடி பழனிசாமி

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....