17
November, 2026

A News 365Times Venture

17
Tuesday
November, 2026

A News 365Times Venture

'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல்

Date:

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்​கப்​பட்டு கடந்த நவ.10-ம் தேதி இந்​தியா முழு​வதும் விற்​பனைக்கு வந்​தது.

இதன் அதி​கார​பூர்வ வெளியீட்டு விழா டெல்​லி​யில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார், அகிலேஷ் யாதவ் உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்றிருக்கின்றனர்.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, ” குடும்பத்தை பற்றி வெளியே பேசுபவை உண்மையற்றவை. எனது உணர்வுகளை இந்த நூலின் வாயிலாகவே வெளிக்கொணர்ந்துள்ளேன். நினைவில் இருந்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். டைரி எழுதாமல் விட்டது நான் செய்த பிழை. இந்தியப் பெண் என்ற உரிமையைப் பெற போராடினேன். இந்த சுயசரிதை நூலுக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது.

என்னுடைய கதையை வெளியில் சொல்ல வேண்டும், புத்தகமாக எழுத வேண்டும் என நண்பர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ராகுல், பிரியங்கா மற்றும் என்னுடைய நண்பரான மஞ்சுலேகா ஆகியோர் கேட்டுக் கொண்டே இருந்ததால் புத்தகம் எழுதலாம் என முடிவு செய்தேன். ஆரம்பத்தில் எழுதுவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. பின்னர், ஒரு அணை உடைந்ததை போல என் வாழ்வின் சம்பவங்கள் மளமளவென எழுத்தாக வந்தன.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா
சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

என்னுடைய இளம் வயது சம்பவங்களை மிக எளிதாக எழுதிவிட்டேன். ஆனால், என்னுடைய அத்தை இந்திரா காந்தி மற்றும் கணவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை. அந்தத் தருணங்களை நினைவுக் கூறுவது மிகக் கடினமாக இருந்தது. நாம் ஒவ்வொரு வார்த்தையை தவறாக பேசும் போதும்…சில செயல்களை தவறாக செய்யும் போதும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருப்போம். நான் இங்குடையவராக ஏற்கப்பட்டுக் கொள்ள நிறைய போராடினேன். இதை ஒவ்வொரு இந்தியப் பெண்ணுடனும் பொருத்திப் பார்க்கிறேன். அவர்கள் திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு செல்கையில் இதே உணர்வை கொண்டிருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അജിത് പവാറിന്റെ മരണം; വിമാനം ഓപ്പറേറ്റ് ചെയ്ത കമ്പനിയുടെ ഉടമയെ ഫട്‌നാവിസ് സംരക്ഷിക്കുന്നു: രോഹിത് പവാര്‍

മുംബൈ: മഹാരാഷ്ട്ര മുന്‍ ഉപമുഖ്യമന്ത്രി അജിത് പവാര്‍ അപകടത്തില്‍ മരിക്കാനിടയായ വിമാനം...

சாட்ஜிபிடி மூலம் புத்தகங்கள்; ஒரே நாளில் ISBN பெற்ற நூல்கள், அதே நாளில் ஒப்புதல்! – FIR முழு விவரம்!

தமிழ்நாடு பொது நூலக இயக்ககம் மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட...

Kishan Reddy : డ్రగ్స్ రహిత భారత్ నిర్మాణమే ప్రధాని మోదీ లక్ష్యం

దేశ భవిష్యత్తుకు పెను సవాలుగా మారిన డ్రగ్స్ మహమ్మారిని రూపుమాపేందుకు ప్రధానమంత్రి...

രാജ്യത്ത് ആദിവാസികള്‍ ആരുമില്ലെന്ന് ബി.ജെ.പി എം.എല്‍.എ; ബി.ജെ.പിയുടെ ആദിവാസി വിരുദ്ധത വെളിപ്പെട്ടെന്ന് കോണ്‍ഗ്രസ്

ഭോപ്പാല്‍: രാജ്യത്ത് ആദിവാസികള്‍ എന്ന് ആരുമില്ലെന്ന പരാമര്‍ശവുമായി മധ്യപ്രദേശിലെ ബി.ജെ.പി എം.എല്‍.എ...