2
November, 2026

A News 365Times Venture

2
Monday
November, 2026

A News 365Times Venture

புதுக்கோட்டை: இரவோடு இரவாக மாற்றபட்ட முதல்வர் விழா மேடை! – நலத்திட்டப் பயனாளிகள் ஏமாற்றம்

Date:

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும் அரசு விழாவின் இடம் திடீரென இரவோடு இரவாக மாற்றப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிவுற்ற பணிகள் திறப்பு

கடந்த திமுக ஆட்சியில் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு முடிவடைந்தது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.8 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு கட்டிடங்கள் மற்றும் மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று புதுக்கோட்டைக்கு வருகை தருகிறார்.

இதுகுறித்து மாவட்ட பி.ஆர்.ஓ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2-11-26 இன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைக்க உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

இரவோடு இரவாக மேடை மாற்றம்!

முன்னதாக, ஆயுதப்படை மைதானத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் பிரம்மாண்ட அரசு விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காகக் கடந்த 2 நாட்களாகப் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டு பிரம்மாண்ட பந்தல், மேடை மற்றும் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

இந்நிலையில், முதலமைச்சரின் பயணத்திட்டம் வெளியானதை தொடர்ந்து, திடீரென்று இரவோடு இரவாக விழா நடைபெறும் இடம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படாமல் இருந்த ஆட்சியர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு இரவோடு இரவாக அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு அமைக்கப்பட்ட பந்தல் வீணடிக்கப்பட்டு விழா இடம் மாற்றப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

புதுக்கோட்டை

பயனாளிகள் ஏமாற்றம்

முன்னதாக ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட இருந்த நிலையில், தற்போதைய இடமாற்றத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் 104 பயனாளிகளுக்கு மட்டுமே நேரடியாக உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இதற்கிடையே, மற்ற பயனாளிகள் பலருக்கும் அதிகாரிகள் போன் செய்து, “இன்று வர வேண்டாம்; இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வந்து நலத்திட்ட உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளனர். இதனால் பயனாளிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து ஆலங்குடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, “முதல்வரிடம் நேரடியாக நலத்திட்ட உதவியைப் பெறலாம் என்ற ஆசையில் அதிகாலையிலேயே எழுந்து தயாரானேன். ஆனால் அதிகாரிகள் போன் செய்து இன்று வர வேண்டாம் என்று கூறிவிட்டனர்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ காரணம் ஏதுமின்றி இரவோடு இரவாக முதலமைச்சர் விழா மேடை மாற்றப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സ്ഥാനാർഥി പട്ടികയ്ക്ക് പിന്നാലെ എ.എ.പിയിൽ ഭിന്നത; മൂന്ന് എം.എൽ.എമാർ ബി.ജെ.പിയിൽ ചേർന്നു

ന്യൂദൽഹി: 2027-ലെ പഞ്ചാബ് നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിനുള്ള ആദ്യ സ്ഥാനാർഥി പട്ടിക ആം...

"குடிநீர், கழிவறைகூட இல்லை!" – முதல்வர் விஜய்யைச் சந்திக்க வந்த கே.எம்.செரீப் பூட்டி வைப்பு

புதுக்கோட்டை தவெக கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்...

Rahul Gandhi: జ్ఞానేశ్ కుమార్ తర్వాత మోదీ వంతు.. రామ్‌లీలా మైదాన్‌లో రాహుల్ హెచ్చరిక!

Rahul Gandhi: ఢిల్లీలోని రామ్‌లీలా మైదాన్‌లో జరిగిన ఇండియా కూటమి మెగా...