2
November, 2026

A News 365Times Venture

2
Monday
November, 2026

A News 365Times Venture

பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்!

Date:

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். அடுத்த சில தினங்களில் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து கொண்டார். ஜெயக்குமாரின் இந்த நடவடிக்கை அதிமுக மட்டுமின்றி தொகுதியிலும் பெரிய அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காலியாக உள்ள பெருந்துறை தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தவெக வேட்பாளராக ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுவார் என அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வருகின்றனர்.

அரசு நிகழ்ச்சியில் ஜெயக்குமார்

இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோர் ஈரோட்டில் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் ஜெயக்குமார். அண்மையில் விஜய் பாலாஜி தலைமையில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அமைச்சருடன் இணைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். “அரசின் எந்தவொரு பதவியிலும் இல்லை, மக்கள் பிரதிநிதியாகவும் இல்லாத ஒருவர் அரசு வளர்ச்சிப் பணி ஆய்வுகளில் எப்படி பங்கேற்க முடியும்? நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்?” என்று அதிமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான விவாதங்கள் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കാലടി സര്‍വകലാശാലയിലെ സമരം; വിദ്യാര്‍ത്ഥികളെ പരീക്ഷ എഴുതിക്കണമെന്ന ഹൈക്കോടതി ഉത്തരവിനെതിരെ അപ്പീലുമായി വൈസ് ചാന്‍സലര്‍

തിരുവനന്തപുരം: കാലടി സംസ്‌കൃത സര്‍വകലാശാലയില്‍ സസ്‌പെന്‍ഷന്‍ നടപടി നേരിട്ട വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്ക് പരീക്ഷ...

Pune: కొడుకుతో సహా 18వ అంతస్తు నుంచి దూకిన మహిళ.. భర్త మరో పెళ్లి చేసుకోవాలని లేఖ!

Pune:  మహారాష్ట్ర పూణేలో విషాదం చోటుచేసుకుంది. పింప్రి-చించ్వాడ్‌లోని ఓ రెసిడెన్షియల్ బిల్డింగ్...

സിദ്ധരാമയ്യ സ്റ്റിങ് ക്യാമറ ഓപ്പറേഷന്‍ വിവാദം: ഉപയോഗിച്ച ഫോണ്‍ കൈമാറിയത് കേന്ദ്രമന്ത്രിയുടെ വസതിയില്‍ വെച്ചാണെന്ന് റിപ്പോര്‍ട്ട്

ന്യൂദല്‍ഹി: കര്‍ണാടക മുന്‍ മുഖ്യമന്ത്രി സിദ്ധരാമയ്യയ്‌ക്കെതിരെ സ്റ്റിങ് ഓപ്പറേഷന്‍ നടത്താന്‍ ഉപയോഗിച്ച...

“தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் போல, தமிழை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டிற்கும் ஒரு...