23
October, 2026

A News 365Times Venture

23
Friday
October, 2026

A News 365Times Venture

"பெண்களே, சிறுமிகளே… உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்!"- எடப்பாடி பழனிசாமி

Date:

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

‘பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்’ என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ,

இப்படி ஆளுங்கட்சி தவெகவின் காமுக SIR-களால் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

ஆட்சிதான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது.

இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode?

மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் – உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெகவினர் என்றால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

‘நமக்கு நாமே பாதுகாப்பு’ என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അവന്‍ വെറും തീവ്രവാദിയല്ലേ, അല്ലാതെ ദേശീയ പതാക ഉയര്‍ത്തിയതൊന്നുമല്ലല്ലോ: അമേരിക്കന്‍ പൗരന്റെ ജാമ്യം നീട്ടിയതില്‍ അഭിജീത് ദീപ്‌കെ

ന്യൂദല്‍ഹി: മ്യാന്‍മറില്‍ ഭീകരവാദ പരിശീലനം നല്‍കിയ അമേരിക്കന്‍ പൗരനെ യു.എസിലേക്ക് തിരികെ...

Sanju Samson: ఏడాదిలో ఎనిమిదోసారి 50+ పరుగులు.. కోహ్లీ రికార్డుకే ఎసరు పెట్టిన సంజూ..!

Sanju Samson: న్యూజిలాండ్‌తో జరిగిన తొలి టీ20లో టీమిండియా ఓపెనర్ సంజూ...

മോദിയെയും അദാനിയെയും കുറിച്ചുള്ള ഡോക്യുമെന്ററി എക്‌സില്‍ പങ്കുവെച്ചതിന് 24 പേര്‍ക്കെതിരെ നോട്ടീസ്

മുംബൈ: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിയെയും വ്യവസായി ഗൗതം അദാനിയെയും കുറിച്ചുള്ള ഡോക്യുമെന്ററി...

ஒன்றிய – மாநில உறவு குறித்து திமுக அரசு அமைத்த கமிட்டி; கிடப்பில் போடும் தவெக அரசு? – பின்னணி என்ன?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்த சிக்கல்களை ஆராய ஓய்வுபெற்ற...