22
October, 2026

A News 365Times Venture

22
Thursday
October, 2026

A News 365Times Venture

“இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவார்..!" – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்

Date:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பட்டா வழங்கும் அரசு நிகழ்வு நடைபெற்றது. இதில், அமைச்சர் பர்வேஸ், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய செங்கோட்டையன், “நான்கே நாள்களில் மாவட்ட ஆட்சியரும் அமைச்சரும் இணைந்து 1,384 பயனாளிகளுக்கு பயன்கள் சென்றடையச் செய்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அனைத்துத் துறைகளும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு முதலமைச்சர், முதல் நாளில் எதிர்க்கட்சித் தலைவருடனும், அதன் பின், நாட்டின் ஆளுங்கட்சிப் பிரதமருடன் பங்கேற்றிருக்கிறார்.

விஜய பாஸ்கர்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு, சிறந்த தலைவரான தளபதியுடன் பயணிப்பது மகிழ்வளிக்கிறது. களத்தில் நின்று செயலாற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். தொகுதி மக்களின் அனைத்துக் குறைகளையும் பிரச்னைகளையும் அவர் நன்கு அறிந்தவர். அதனால்தான் எல்லாரையும் அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்துள்ளார். அவர் மக்கள் களத்தில் நிற்பது மட்டுமன்றி வரவிருக்கும் தேர்தலில் வெற்றியும் காண்பார். அந்த வெற்றிக்குப் பிறகு நமது தலைவருக்குப் பின்னால் நின்று உறுதியோடு பணியாற்றுவார் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என உரையாற்றியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മോദി സര്‍ക്കാരിന്റേത് ഹിറ്റ്‌ലറുടേത് പോലുള്ള ഭരണം: ഖാര്‍ഗെ

കലബുറഗി: നരേന്ദ്ര മോദിയുടെ നേതൃത്വത്തിലുള്ള എന്‍.ഡി.എ സര്‍ക്കാര്‍ ഹിറ്റ്‌ലറുടെ ഭരണത്തിന് സമാനമാണെന്ന്...

புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் – வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவுக்கு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு ஆசிரமங்கள்...

നിര്‍ഭയത്വത്തിന്റെ മുഖങ്ങള്‍; ഗ്യാനേഷ് മസ്റ്റ് ഗോ എന്ന് മുദ്രാവാക്യം വിളിച്ച് സൗരവും അശുതോഷും; ചിത്രങ്ങള്‍ പങ്കുവെച്ച് ദീപ്‌കെ

ന്യൂദല്‍ഹി: സി.ജെ.പി സഹ കണ്‍വീനര്‍മാരായ സൗരവ് ദാസിനെയും അശുതോഷ് രങ്കയെയും കസ്റ്റഡിയില്‍...