15
October, 2026

A News 365Times Venture

15
Thursday
October, 2026

A News 365Times Venture

'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' – கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!

Date:

நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கம் என பெயர் மாற்றியிருக்கின்றனர். கோவையில் நடந்த மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் அரசியலுக்கு அச்சாரம் இடுகிறார் என பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவரின் இந்த மூவ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Dhanush

இதுதொடர்பாக தனுஷ் மன்றத்தின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம், ‘தலைவரின் படத்துக்கு முன்பாக நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவை எப்போதும் சிறப்பாக நடத்துவோம்.

அந்த ஆடியோ விழா பற்றி ஆலோசிக்க எப்போதும் சென்னையில்தான் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவோம். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என ஓம் படத்தின் ஆடியோ விழா குறித்து ஆலோசிக்க கோவையில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினோம். இப்போது வரை எங்களின் மன்றத்தை 58 மாவட்டங்களாக பிரித்திருக்கிறோம்.

Dhanush
Dhanush

58 மாவட்டங்களின் தலைவர்கள் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் என 2500 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ஓம் படத்தின் ஆடியோ விழா பற்றியும் அடுத்தக்கட்ட நலத்திட்ட நிகழ்வுகள் பற்றியும் முக்கியமாக பேசினோம். தலைமையின் உத்தரவின் பேரில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் என்பதை தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றியிருக்கிறோம். மன்றத்தின் கொடியிலும் சில மாற்றங்களை செய்து புதிய கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். ரசிகர்களை மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பணிகளை நோக்கி நகர்த்த இது உதவுமென நம்புகிறோம். மிக கவனமாக ரசிகர்களை நல்வழிப்படுத்தும்படி கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்’ என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

റോഡ് ‘സൗന്ദര്യവത്കരണം’ അപകടമുണ്ടാക്കുന്നു; ബംഗാള്‍ സര്‍ക്കാരിനെതിരെ പ്രതിപക്ഷം

കൊല്‍ക്കത്ത: ദുര്‍ഗാ പൂജയോടനുബന്ധിച്ചുള്ള സൗന്ദര്യവത്കരണത്തിന്റെ ഭാഗമായി റോഡില്‍ മഴവില്‍ നിറത്തില്‍ പെയന്റടിച്ച്...

OTR: నాగర్‌కర్నూల్ కాంగ్రెస్‌లో కరపత్రాల రచ్చ.. తండ్రీకొడుకులను టార్గెట్ చేసింది ఎవరు?

OTR: కరపత్రాల యుద్ధానికి కారకులెవరు? తండ్రీ కొడుకులైన ఎమ్మెల్సీ, ఎమ్మెల్యేని టార్గెట్‌...

மின் கொள்முதல்: “கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" – அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு அரசியலில் மின்சாரத்துறை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கவிருக்கும் செய்தி...