13
October, 2026

A News 365Times Venture

13
Tuesday
October, 2026

A News 365Times Venture

அரிசி முதல் காய்கறி வரை.! – திடீர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? அரசு என்ன செய்ய வேண்டும்?

Date:

சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எண்ணெய், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தைப் பெருமளவில் பாதித்திருக்கிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன?

இந்நிலையில் இந்த திடீர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விகளுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம்.

நம்மிடம் பேசிய அவர், “தமிழகத்தில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் நிலவுகின்றன. முதற்கட்டமாக, நீர் ஆதாரங்களின் பற்றாக்குறையும் தொடர் வறட்சியும் வேளாண் உற்பத்தியைப் பெருமளவில் பாதித்துள்ளன.

நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும்!

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெற்று வந்த நெல் விவசாயம், தற்போது 10 லட்சம் ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இதனால் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு இழந்து, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்ற, அரசு நீர் ஆதாரங்களைப் பெருக்கவும், ஏரி-குளங்களைத் தூர்வாரிச் சீரமைக்கவும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, நேர்மையான அதிகாரிகளின் மூலம் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

வறட்சி
வறட்சி

ஆட்கள் பற்றாக்குறை

விவசாயத்தில் நிலவும் ஆட்களின் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு ஆகியவை உற்பத்திச் செலவை அதிகரிக்கும் மற்றொரு முக்கிய காரணியாக இருக்கின்றன.

கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற காரணங்களால் விவசாயப் பணிகளுக்குக் கூலி ஆட்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது.

போதிய வருமானமும் பாதுகாப்பான சேமிப்பு வசதிகளும் இல்லாத சூழலில், விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

டீசல், பெட்ரோல் விலையேற்றமும்.!

மேலும், சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழல், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் சுங்கக் கட்டணம் ஆகியவற்றின் விலையேற்றம் பொருட்கள் விநியோகச் செலவை வெகுவாக உயர்த்தியுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பேக்கிங் பொருட்களின் விலை உயர்வுடன் மின்சாரக் கட்டண உயர்வும் சேரும்போது, பொருட்களின் இறுதிக்கட்ட விற்பனை விலை இயல்பாகவே உயர்ந்து மக்களுக்கு கூடுதல் சுமையாக மாறுகிறது.

டீசல், பெட்ரோல் விலையேற்றம்
டீசல், பெட்ரோல் விலையேற்றம்

அரசு இதனை செய்ய வேண்டும்

தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் அறுவடை செய்யப்படும் காலங்களில், விவசாயிகளுக்குச் சரியான கொள்முதல் விலை வழங்கி அவற்றைச் சேமிக்கக் குளிர்பதனக் கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும்.

தக்காளி போன்றவற்றை வீணாக்காமல் பொடி மற்றும் சாறுகளாக மாற்றும் தொழிற்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் தரலாம்.

சந்தையில் பொருட்களின் விலை உயரும்போது, அரசு சேமித்து வைத்த பொருட்களின் மூலம் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

தனிக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

அதேவேளையில், மக்களும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் தவிர்ப்பதுடன், திருமண நிகழ்வுகள் மற்றும் அன்றாட வாழ்வில் உணவுப் பொருட்களை வீணாக்காமல் பாதுகாக்கப் பழக வேண்டும்.

அரசாங்கமும் மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார் என்று அரசு, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து, இதற்கெனத் தனிக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

விவசாயம்
விவசாயம்

குழு உருவாக்க வேண்டும்!

வணிகர் சங்கப் பிரதிநிதிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை அமைத்து, ஒவ்வொரு பருவத்திலும் தேவைப்படும் பொருட்களின் அளவைக் கணக்கிட்டுத் திட்டமிட வேண்டும்.

இத்தகைய அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது மட்டுமே எதிர்காலத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க முடியும்” என்று விலைவாசி உயர்வுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களையும், அதற்கான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்வுகளையும் நம்மிடம் விளக்கினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2000 രൂപക്ക് മുകളിലെ വാണിജ്യ യു.പി.ഐ ഇടപാടുകള്‍ക്കുള്ള മര്‍ച്ചന്റ് ഫീ ദീപാവലിക്ക് ശേഷമെന്ന് എന്‍.പി.സി.ഐ

ന്യൂദല്‍ഹി: 2000 രൂപയ്ക്ക് മുകളിലുള്ള വാണിജ്യ യു.പി.ഐ ഇടപാടുകള്‍ക്ക് മേലുള്ള മര്‍ച്ചന്റ്...

Off The Record: తూర్పు గోదావరిలో కూటమికి తిప్పలు… సీట్లు దక్కేదెవరికి…?

Off The Record: స్థానిక ఎన్నికల ముంగిట్లో… తూర్పుగోదావరి జిల్లాలో మారుతున్న...

“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி

55-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடிவரும் அ.தி.மு.க, இடைத்தேர்தலில் சிட்டிங் தொகுதிகள் இரண்டையும் த.வெ.க-விடம்...