26
September, 2026

A News 365Times Venture

26
Saturday
September, 2026

A News 365Times Venture

எல்லா நாடுகளுக்கும் உடனடி தேவை 'இது' தான்… "7 நாள்களில் ஹார்முஸ்.!" குட் நியூஸ் சொல்கிறதா ஈரான்?

Date:

ஹார்முஸ் நீர்ச்சந்தி விரைவில் திறக்கப்படுகிறது போலும். அதற்கான அனைத்து பாசிட்டிவ் சிக்னல்களும் தெரிகின்றன.

இதுவரை பேச்சுவார்த்தைக் குறித்தோ, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் குறித்தோ ஈரான் வாயைத் திறந்ததே இல்லை. ஆனால், கடந்த வார இறுதியிலிருந்து ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறப்பது குறித்துப் பேசுகிறது.

ஈரான் சொல்லும்போது அது ஏழு நிபந்தனைகளை அமெரிக்காவிற்குச் சொல்லியிருப்பதாகவும், அது நிறைவேறினால், ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் என்று கூறியுள்ளது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி

அந்த ஏழு நிபந்தனைகளில்…

> கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார பயங்கரவாதம் உள்ளிட்ட அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

> அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

> முடக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.

> இரு கடலோர அரசாங்கங்களுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையை ஏற்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளும் அடங்கியிருக்கிறது.

இந்த நிபந்தனைகளை நேற்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி பகிர்ந்திருந்தார்.

அராக்சி பேச்சு

நேற்று ஐ.நா பொதுக்கூட்டத்தில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேசும்போது, “ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்ட அடுத்த ஏழு நாள்களில் ஹார்முஸ் திறக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்கா பக்கமும் ஈரான் போர் நிறுத்தம் குறித்த பாசிட்டிவான பதில்கள் தான் வருகின்றன.

ஏன் முக்கியம்?

இப்போதைய பொருளாதார சூழலில், ஹார்முஸ் திறப்பு மிக முக்கியமாகிறது.அமெரிக்காவின் கருவூலப் பத்திரத்தின் வட்டி விகிதம் 2007-ம் ஆண்டிற்குப் பிறகு, 5 சதவிகித வட்டியைத் தாண்டியுள்ளது. இது பணவீக்கத்திற்கான எச்சரிக்கை.

அடுத்தடுத்து வங்கிகள் வட்டி விகிதங்களை ஏற்றுமோ என்கிற அச்சமும் நிலவுகிறது.

பணவீக்கம்
பணவீக்கம்

பணவீக்க ஏற்றத்திற்கு மிக முக்கிய காரணமே ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் தான். அங்கே போக்குவரத்துத் தடைப்பட்டதும் நாடுகளின் எண்ணெய் போக்குவரத்தும், எண்ணெய் இருப்பும் பாதித்தது.

எந்தவொரு நாட்டிலும் பொருள்களைக் கொண்டு செல்ல… கொண்டுவர எண்ணெய் தேவை. அது பாதிக்கப்படும்போது, விலைவாசி நிச்சயம் ஏறும்.

இது தான் தற்போதைய பணவீக்கத்திற்கான மிக முக்கிய காரணம்.

இதனால், ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்பட்டாலே, பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் வரும். நாடுகளும் தப்பிக்கும்.

இப்போது அனைத்து உலக நாடுகளுக்கும் மிக முக்கிய தேவை இது தான் – ஹார்முஸ் நீர்ச்சந்தி திறப்பு!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സയണിസം വംശീയത; ഇസ്രഈലിനെ എതിര്‍ക്കുന്നത് ജൂത വിരുദ്ധതയല്ലെന്ന് ജൂത സമുദായാംഗമായ ഗ്രീന്‍ പാര്‍ട്ടി നേതാവ്

ലണ്ടന്‍: സയണിസം ഒരുതരം വംശീയതയാണെന്നും താന്‍ ഒരു സയേണിസ്റ്റ് വിരുദ്ധനാണെന്നും ബ്രിട്ടനിലെ...

Cyclone Arnab: ‘సైక్లోన్ అర్నబ్’ పేరుతో వైరల్.. ఐఎండీ ఏం చెప్పిందంటే..!

ప్రస్తుతం దేశంలో పలు రాష్ట్రాల్లో భారీ నుంచి అతి భారీ వర్షాలు...

ದಸರಾ ಸಂಭ್ರಮ: ಟ್ರಾಫಿಕ್ ನಿರ್ವಹಣೆಗೆ ಡಿಜಿಟಲ್ ತಂತ್ರಜ್ಞಾನ, ಸುಗಮ ಸಂಚಾರಕ್ಕೆ ಹೊಸ App.

  ಮೈಸೂರು, ಸೆ.25, 2026: ವಿಶ್ವವಿಖ್ಯಾತ ಮೈಸೂರು ದಸರಾ ಮಹೋತ್ಸವಕ್ಕೆ ದಿನಗಣನೆ...

ഗ്യാനേഷ് കുമാറിന് കുറഞ്ഞത് പത്മഭൂഷണെങ്കിലും നല്‍കണമെന്ന് ബി.ജെ.പി നേതാവ്

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാര്‍ കുറഞ്ഞത് ഒരു...