18
September, 2026

A News 365Times Venture

18
Friday
September, 2026

A News 365Times Venture

"அந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது..!"- அயலக மாணவர் விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம்

Date:

அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் மீண்டும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து மாணவருக்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்.

பாரதிதாசன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.

ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

பாரதிதாசன்
பாரதிதாசன்

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

”அது AI போட்டோ; போலி புகார்; என் மீதான நடவடிக்கையை ஏற்க முடியாது" – கருப்பு முருகானந்தம்!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக...

Pakistan: అరేబియా సముద్రంలో భారత్-పాక్ నేవీ ఢీ.. చైనా వ్యూహాలపై అనుమానం.!

Pakistan: అరేబియా సముద్రంలో పాకిస్తాన్ నేవీ, భారత నేవీని కవ్వించే ప్రయత్నం...

ಕರಾವಳಿಗೆ ಹೊಸ ಟೂರಿಸಂ ಪಾಲಿಸಿ: ರಾಜ್ಯದ 2ನೇ ಆಧಿಕೃತ ಭಾಷೆಯಾಗಿ ತುಳು – ಸಿಎಂ ಡಿಕೆಶಿ ಘೋಷಣೆ

ಮಂಗಳೂರು,ಸೆಪ್ಟಂಬರ್,18,2026 (www.justkannada.in): ಮಲೆನಾಡು ಕರಾವಳಿ ಪ್ರದೇಶಕ್ಕೆ ಹೊಸ ಟೂರಿಸಂ ಪಾಲಿಸಿ...