7
September, 2026

A News 365Times Venture

7
Monday
September, 2026

A News 365Times Venture

எஸ்.எஸ்.சிவசங்கர் : `மோசடி புகாரால் சட்டமன்றத்துக்கு ஆப்சென்டா?' – பின்னணி என்ன?

Date:

திமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அரியலூர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சில தினங்கள் மட்டுமே கலந்து கொண்ட சிவசங்கர் அதன் பிறகு கூட்டங்களில் பங்கேற்காதது அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக எழுந்த மோசடி புகாரில் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து அவரும் விசாராணைக்கு ஆஜராகி விளக்கமளித்தார்.

ஸ்டாலின் உடன் சிவசங்கர்

இந்நிலையில், ஆளும் தவெக அரசின் நடவடிக்கைக்கு பயந்து சிவசங்கர் சட்டமன்றத் கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்து ’சைலண்ட்’ ஆகிவிட்டதாக தகவல் பரவியது. இதை மறுத்த சிவசங்கர் ஆதரவாளர்கள், திமுக தலைவர் ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கும் அண்ணன் சிவசங்கர் திமுக-வில் அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறார். இதை பொறுக்க முடியாத சில திமுக புள்ளிகளால் சிவசங்கர் தவெக அரசுக்கு பயந்து அமைதியாகி விட்டதாக கிளப்பி விடுவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தேர்தலுக்கு பிறகு, திமுகவில் எடுக்க வேண்டிய மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த குழுவில் சிவசங்கரும் இடம் பெற்றார். மறுசீரமைப்பு தொடர்பான கூட்டங்களில் கலந்து கொண்ட சிவசங்கருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்தார். சட்டமன்றத்தில், சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை முன் வைத்து, ஆளும் கட்சியின் அவதூறுகளுக்கு ஆதார புள்ளி விவரங்களுடன் பதிலை துல்லியமாக எடுத்து வைத்து வந்தார்.

எஸ்.எஸ்.சிவசங்கர்

ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் நம்பிக்கையை பெற்ற சிவசங்கருக்கு மாநில அளவில் சிவசங்கருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் பேசப்படுகிறது. சிவசங்கரின் வளர்ச்சியை விரும்பாத திமுகவைச் சேர்ந்த ஒரு சில முக்கிய புள்ளிகளுக்கு இவை எரிச்சலை உண்டாக்கியது. இந்நிலையில், உடல் சோர்வு காரணமாக, மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார் சிவசங்கர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

இதனால் அன்றைய தினம் சட்டமன்ற கூட்டத்தில் அவர் பங்கேற்கமுடியவில்லை. இதையடுத்து, ஏன் சட்டமன்ற கூட்டத்துக்கு வரவில்லைனு உதயநிதி கேட்க சிவசங்கர் விபரத்தை சொன்னார். இந்த தகவல், ஸ்டாலினுக்கு செல்ல, உடனடியாக சிவவசங்கரிடம் பேசியவர், டாக்டர் ஒருவரையும் பரிந்துரை செய்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்த சிவசங்கருக்கு சர்ஜரி செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மருத்துவமனையில் இருக்க சிகிச்சை தொடர்கிறது. தற்போது நலமாக இருக்கும் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

எஸ்.எஸ்.சிவசங்கர்

இன்னும் சில வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பழையபடி அவர் வெளியே வந்து அரசியல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதற்கு ஒரு மாதம் ஆகும். இப்படியான சூழலில் அவர் சட்டமன்றம் உள்ளிட்ட எதிலும் பங்கேற்கவில்லை. இது பலராலும் முனு முனுக்கப்பட்ட நிலையில் விஷயம் தெரிந்து அவர் நலமாக வேண்டும் என்பதையே விரும்பினர். ஆனால் சிவசங்கர் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத திமுக-வில் உள்ள ஒரு சில தலைமை கழக நிர்வாகிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தவெக அரசின் நடவடிக்கைக்கு பயந்து சைலண்ட் ஆகிவிட்டார் என கிளப்பி விட்டனர்.

சிகிச்சை விவரத்தை இப்போதைக்கு வெளியே சொல்ல வேண்டாம் என தலைமை அறிவுறுத்தியதால் தான் இதை சிவசங்கர் குடும்பத்தினர் வெளியே தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் இரண்டு முறை நேரில் வந்து நலம் விசாரித்திருக்கிறார். உதயநிதி வந்ததுடன் சிகிச்சை நல்லபடியாக நடக்க உறுதுணையாக இருந்தார். இவையெல்லாம் தெரியாதவர்கள் கிளப்பி விட்டவை வதந்தி என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிவசங்கர் சட்டமன்றத்திற்கு வராதது தவெக-வினர் ஹாப்பியாக இருக்கிறார்கள் இது இயல்புதான். ஆனால் சொந்தக் கட்சியினர் கீழ்த்தரமாக நடந்து கொள்வதை ஏற்க முடியவில்லை. சிவசங்கர் மீண்டும் களத்துக்கு வந்து தன் செயல்கள் மூலம் இதுபோன்ற தகவலை பரப்பியவர்கள் முகத்தில் கரியை பூசுவார்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹಿಂದುಳಿದ ಒಕ್ಕೂಟ ಸಮಾವೇಶ ನನಗೆ ಸಂಬಂಧಪಟ್ಟಿಲ್ಲ- ಸಚಿವ ಸತೀಶ್ ಜಾರಕಿಹೊಳಿ

ಬೆಂಗಳೂರು,ಸೆಪ್ಟಂಬರ್,7,2026 (www.justkannada.in): ಹಿಂದುಳಿದ ಒಕ್ಕೂಟ ಸಮಾವೇಶ ನನಗೆ ಸಂಬಂಧಪಟ್ಟಿಲ್ಲ. ನನ್ನನ್ನು...

ഹോർമുസിൽ പുതിയ കപ്പൽച്ചാലും നിയന്ത്രണങ്ങളും പ്രഖ്യാപിക്കാൻ ഇറാൻ; യു.എസ് സംഘർഷം രൂക്ഷമാകുന്നു

ടെഹ്‌റാൻ: ഹോർമുസ് കടലിടുക്കിന് സമീപം പ്രവേശന നിയന്ത്രിത മേഖല ഏർപ്പെടുത്തുമെന്നും ഒമാനുമായി...

முதல்வர் உரை: "பதிலற்ற பதிலுரை; Prepare well next time.!" – உதயநிதி விமர்சனம்

மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை,...

Vaibhav Sooryavanshi: చిన్న వయసులోనే ఊహించని పాపులారిటీ.. వైభవ్ వైభవ్ అంటూ మాస్ మేనియా..

దులీప్ ట్రోఫీ ఫైనల్ మ్యాచ్‌లో యువ సంచలనం వైభవ్ సూర్యవంశీ తన...