31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

"தலித் மக்களுக்கான சட்டபூர்வ உரிமைகளை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்!" – திருமாவளவன் வலியுறுத்தல்

Date:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இது, உள் நோக்கத்தோடு நடந்துள்ளதா என கேள்வி எழுகிறது. இதற்கு பொறுப்புள்ள அதிகாரிகளும், அமைச்சர்களும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இனி வரும் காலங்களில் அது போன்ற பிழைகள் நிகழாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது, ஏற்புடையதல்ல. இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், SFI உள்ளிட்ட மாணவர் அமைப்பினரையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள் மீதான அரசின் நடவடிக்கை மென்மையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்க்கிறீர்கள். இது குறித்து ஏற்கனவே எனது கருத்தை கூறியுள்ளேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்படியே வழிமொழிகிறது. இந்த அணுகுமுறையும் ஏற்புடையதல்ல. முதலமைச்சர் இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். தோழமைக் கட்சிகளைப் புண்படுத்தாத வகையில் அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

thol.thirumavalavan

அதேபோல், தி.மு.க ஆட்சிக் காலத்தில் தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னிஅரசு பேசியதற்கு தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்தும் கேட்கிறீர்கள். எதுவும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. திரித்துப் பேசக்கூடாது. பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தோம் என கூறினார்கள். அது, உண்மைதான். பொதுத்தொகுதிகளில் நிற்க வைப்பது இயல்ப ஒன்றுதான். தலித்துகள் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியும். ஆனால், தலித் அல்லாதவர்கள் தனித் தொகுதிகளில் போட்டியிட முடியாது. அது, சட்டப்படி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிறுத்துவதை ஏதோ அவர்களுக்கு பரிதாபப்பட்டு நிறுத்தினீர்களா அல்லது தகுதி அடிப்படையில் நிறுத்தினீர்களா என கேள்வி எழுப்பி உள்ளார். வன்னியரசு தவறாக பேசினார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். தலித்துகளை பொது தொகுதிகளில் நிறுத்துவது இரக்கப்பட்டு செய்வது போல என்று சொல்லக் கூடாது என அவர் கூறினார். த.வெ.க தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர். தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற வி.சி.க தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വെനസ്വേലന്‍ എണ്ണ ഉപയോഗിച്ച് യു.എസിന്റെ പെട്രോളിയം കരുതല്‍ ശേഖരം നിറയ്ക്കുമെന്ന് ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: വെനസ്വേലന്‍ എണ്ണ ഉപയോഗിച്ച് തങ്ങളുടെ പെട്രോളിയം കരുതല്‍ ശേഖരം നിറയ്ക്കുമെന്ന്...

Congress: "2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்!" – அமைச்சர் விஸ்வநாதன்

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார்...

ಬೆಂಗಳೂರು ಮೇಲಿನ ಒತ್ತಡ ಕಡಿಮೆ ಮಾಡಲು ಮೈಸೂರು ಸೇರಿ 5 ನಗರಗಳ ಅಭಿವೃದ್ಧಿಗೆ ಹೊಸ ಯೋಜನೆ- ಸಿಎಂ ಡಿ.ಕೆ. ಶಿವಕುಮಾರ್

ಮೈಸೂರು ಆಗಸ್ಟ್ ,29,2026 (www.justkannada.in): ಬೆಂಗಳೂರು ನಗರದಲ್ಲಿ ಹೆಚ್ಚುತ್ತಿರುವ ಜನಸಾಂದ್ರತೆ,...