19
October, 2026

A News 365Times Venture

19
Monday
October, 2026

A News 365Times Venture

'ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க அரசு முயல்கிறதா?'-தவெக எம்எல்ஏ பேச்சுக்கு டிடிவி கண்டனம்

Date:

தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்று சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கருப்பையா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதே போல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் அவர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துகிறேன்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അന്ധമായ രാഷ്ട്രീയ ആരാധന രാജ്യത്തിന്റെ അടിത്തറ തകര്‍ക്കും; ‘അന്ധങ്ങള്‍ ആകാതിരിക്കുക’; ജന്തര്‍മന്തര്‍ സമരത്തിന് പിന്തുണയുമായി ജോബ് കുര്യന്‍

  തിരുവനന്തപുരം: അന്ധമായ രാഷ്ട്രീയ കൂറും നേതാക്കളോടുള്ള ആരാധനയും രാജ്യത്തിന്റെ പുരോഗതിക്ക്...

போதைப்பொருள்: “தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?" – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள 'மெத்'...

AP Municipal Elections: ఏపీలో ముగిసిన మున్సిపల్ ఎన్నికల నామినేషన్ల పర్వం..

ఆంధ్రప్రదేశ్‌లో ఉత్కంఠ రేకెత్తిస్తున్న మున్సిపల్ ఎన్నికల నామినేషన్ల ప్రక్రియ గడువు ముగిసింది....

കോക്രോച്ച് ജനതാ പാർട്ടിയെ നേരിടാൻ ലാൽ ഹിറ്റ് ജനതാ പാർട്ടി

ന്യൂദൽഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണർ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജി ആവശ്യപ്പെട്ട് കോക്രോച്ച്...