17
October, 2026

A News 365Times Venture

17
Saturday
October, 2026

A News 365Times Venture

`போர் தொடங்கிய காரணம் மாறிவிட்டதா?' ரஷ்யா – உக்ரைன் சண்டை ஏன் தொடர்கிறது?

Date:

4 ஆண்டுகள் 5 மாதங்களைக் கடந்துள்ளது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர். இத்தனை நாள்கள் தொடர்ந்தும், இந்தப் போரில் சமாதனம், முடிவு ஆகிய வார்த்தைகளுக்கு இடமில்லாமல் இருக்கிறது.

இவ்வளவு ஏன்… பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் கூட ‘இப்போது’ நடப்பதாக தெரியவில்லை. ரஷ்யா – உக்ரைன் போரை அதிபரானதும் விரைவில் முடித்துவிடுவேன் என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட, தற்போது ஈரான் போரில் பிஸி ஆகிவிட்டார்.

இருந்தும், ரஷ்யா, உக்ரைன் நாடுகள் மாறி மாறி கடுமையாக மோதிக்கொண்டிருக்கின்றன.

ரஷ்யா, உக்ரைன்

ஏன் இன்னும் ரஷ்யா, உக்ரைனில் போர்?

இந்த நேரத்தில், இரு நாடுகளும் ‘இப்போது’ ஏன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன என்பது புரியவில்லை. நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்தப் போது தான், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது… உக்ரைனும் ரஷ்யாவிற்குப் பதிலடி தந்தது.

2022-ம் ஆண்டில் இந்தப் போர் தொடங்கிய போது, அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் ஆட்சி. அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிதி முதல் ஆயுத விநியோகம் வரை அனைத்திலும் ஆதரவாக இருந்தது.

இப்போது இந்த உதவி தொடர்கிறது என்றாலும், முன்பு இருந்தது போல, இப்போது உதவியும், ஆதரவும் இல்லை.

மேலும், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ட்ரம்ப் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க விரும்பவில்லை. அவர் அமெரிக்காவே நேட்டோவில் இருந்து விலக வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்தப் போர் தொடக்கத்திற்கான காரணமே தற்போது ‘இல்லை’ என்கிற போதும், இரு நாடுகளும் மோதிக்கொள்கின்றன.

ஆனாலும், ஜெலன்ஸ்கிக்கு இன்னும் நேட்டோ ஆசை போய்விடவில்லை. இதனால், ரஷ்யா உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது என்கிற அடிப்படையில் இந்தப் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ரஷ்யா மட்டும் சும்மா இருந்துவிடவில்லை. உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளைக் குறி வைத்து தாக்கி வருகிறது ரஷ்யா.

பதிலடியாக, உக்ரைன் ரஷ்யாவில் எரிசக்தி சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி வருகிறது.

புதின்
புதின்

ரஷ்யாவில் தட்டுப்பாடு

ஏற்கெனவே உலக அளவில் ஈரான் போரினால் எரிசக்திகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில், இந்தத் தாக்குதல்கள் மேலும் சிக்கலைப் பெரிதுப்படுத்தும்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தப் போர் தொடர்வதே கடினம். இன்னும் இந்தப் போர் தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.

உக்ரைன் மிகச்சிறிய நாடு. இந்தப் போரை இதுவரையிலேயே பிற நாடுகளின் உதவியுடன் தான் சமாளித்து வருகிறது. இதில் அமெரிக்காவின் உதவி மிக முக்கியமானது.

ஆனால், இப்போது அமெரிக்காவே ஈரான் போரில் மாட்டிக்கொண்டு முழித்து வருகிறது. இந்த நேரத்தில் உக்ரைனுக்கு அதே உதவி தொடருமா என்பதில் சந்தேகம்.

ரஷ்யாவில் அடுத்த மாதம் தேர்தல் வர உள்ளது. ரஷ்யா மீது இப்போதே பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதனால், ரஷ்யா இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செலுத்த வேண்டும்.

காரணம், ஐரோப்ப நாடுகளில் இனி குளிர் காலம். இந்த நேரத்தில் அவர்களுக்கு குளிர் காய எரிவாயு மிக அவசியம். அவை ரஷ்யாவில் இருந்து பைப் மூலம் தான் அந்த நாடுகளுக்கு செல்லும்.

இப்போது கட்டமைப்புகள் மீது நடக்கும் தாக்குதல்களால், இந்தப் போரினால் ஐரோப்ப நாடுகளும் பாதிக்கப்படும்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

റഷ്യയ്ക്ക് മേലുള്ള ചില ഉപരോധങ്ങള്‍ നീക്കി ട്രംപ്: ഒഴിവാക്കിയത് ഇന്ത്യയ്ക്ക് മേല്‍ 100% തീരുവ ചുമത്താന്‍ കാരണമായവ

വാഷിങ്ടണ്‍: കഴിഞ്ഞ മാസം ട്രംപ് ഒപ്പ് വെച്ച നിയമപ്രകാരം നടപ്പിലാക്കിയ റഷ്യയുമായി...

இதுவரை வாங்கிய ரஷ்ய எண்ணெய்க்கு 'நோ' 100% வரி! ட்ரம்ப்-ன் 'ட்விஸ்ட்'; இந்தியாவுக்குச் சாதகமானதா?

ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று வருகிறது அமெரிக்கா....

YSRCP 2nd Candidates List: ఏపీ స్థానిక ఎన్నికలు.. రెండో విడత అభ్యర్థులను ప్రకటించిన వైసీపీ.. అభ్యర్థులు వీరే!

YSRCP 2nd Candidates List: ఆంధ్రప్రదేశ్‌లో స్థానిక సంస్థల ఎన్నికల నేపథ్యంలో...

വനിതാ ഉദ്യോഗസ്ഥയ്‌ക്കെതിരെ ഔദ്യോഗിക യോഗത്തില്‍ മോശം ഭാഷാപ്രയോഗം: ഐ.എ.എസുകാരനെതിരെ അന്വേഷണം

ശ്രീനഗര്‍: വനിതാ ഉദ്യോഗസ്ഥയ്ക്ക് നേരെ ഔദ്യോഗിക യോഗത്തില്‍ മോശം പദപ്രയോഗം നടത്തിയ...