18
June, 2026

A News 365Times Venture

18
Thursday
June, 2026

A News 365Times Venture

`அனிதாவில் துவங்கிய நீட் மரணம் என் மகளோடு முடியணும்’ – தற்கொலை செய்த கோவை மாணவியின் தந்தை வேதனை!

Date:

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த செந்தில் பிரபு என்பவர், கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரின் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார். சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அனுகீர்த்தனா, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த ஆண்டு தீவிரமாகப் படித்துத் தேர்வும் எழுதி இருந்தார். ​மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக ஆவலோடு காத்திருந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனுகீர்த்தனாவிற்கு கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.

அனு கீர்த்தனா

‘மீண்டும் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற முடியுமா?’ என்ற மன அழுத்தம் காரணமாக… இன்று அதிகாலையில் அனுகீர்த்தனா தனது சித்தப்பாவிற்கு  வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, உடல்வலிக்கு பயன்படுத்தும் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு உறவினர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அனுகீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனு கீர்த்தனாவின்  குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவி அனு கீர்த்தனாவின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை உடலைப் பெறமாட்டோம் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் மற்றும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிபிஎம் போராட்டம்
சிபிஎம் போராட்டம்

அப்போது பேசிய மாணவியின் தந்தை செந்தில் பிரபு, “அனிதாவில் துவங்கிய நீட் மரணங்கள் என் மகள் அனு கீர்த்தனா உடன் முடிய வேண்டும். மருத்துவக் கனவோடு இருக்கும் குழந்தைகளுக்கு நீட் தேர்வு மன உளைச்சலைத் தந்து வருகிறது. ஏராளமான குழந்தைகள் இறப்பிற்கு காரணமான இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார். இது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

DA Hike: విద్యుత్ ఉద్యోగులకు సర్కార్‌ గుడ్‌న్యూస్..

DA Hike: రాష్ట్రంలోని విద్యుత్ ఉద్యోగులకు తెలంగాణ ప్రభుత్వం శుభవార్త అందించింది....

ಜಯದೇವ ರೋಗಿಗಳ ಸಾವು ಕೇಸ್: ಇನ್ನೆರಡು ತಿಂಗಳಲ್ಲಿ ಸಿಬ್ಬಂದಿಗಳ ಕೊರತೆ ನಿವಾರಣೆ- ಸಚಿವ ಡಾ ಶರಣ ಪ್ರಕಾಶ್ ಪಾಟೀಲ್

ಮೈಸೂರು,ಜೂನ್,17,2026 (www.justkannada.in):  ಜಯದೇವ ಹೃದ್ರೋಗ ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ 11 ರೋಗಿಗಳ ಸಾವು...

നാഷണല്‍ കോണ്‍ഫറന്‍സിന്റെ തത്വങ്ങള്‍ വില്പനയ്ക്കുള്ളതല്ല; രാഷ്ട്രീയ നിലപാട് വ്യക്തമാക്കി ഒമര്‍ അബ്ദുള്ള

  ശ്രീനഗര്‍: അധികാരത്തിന് വേണ്ടി തങ്ങളുടെ രാഷ്ട്രീയ പ്രത്യയശാസ്ത്രത്തിലോ അടിസ്ഥാന മൂല്യങ്ങളിലോ...

Vaibhav And Tilak Varma: బిగ్ షాక్.. వైభవ్ సూర్యవంశీకి భారీ జరిమానా, కెప్టెన్ తిలక్ వర్మపై నిషేధం..

శ్రీలంకలోని దంబుల్లా వేదికగా భారత్-ఎ, శ్రీలంక-ఎ జట్ల మధ్య జరిగిన మ్యాచ్‌...