15
June, 2026

A News 365Times Venture

15
Monday
June, 2026

A News 365Times Venture

`ட்ரம்ப் பிறந்த நாளில் கூடாது' – அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அறிவிக்க நள்ளிரவு வரை இழுத்தடித்த ஈரான்

Date:

அமெரிக்கா, ஈரான் இடையேயான போர்நிறுத்த பேச்சுவார்த்தை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு பிரச்னையில் பேச்சுவார்த்தை தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஈரான் அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டுவிழ்த்தியது. இதனால் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

அப்படி இருந்தும் இரு நாடுகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. கத்தார் மற்றும் பாகிஸ்தான் இதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஜெனிவாவில் கையெழுத்தாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்து நேற்று அறிவிக்கப்பட இருந்தது.

ஆனால் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் ஜூன் 14 அன்று ஈரானில் அந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெறுவதை விரும்பவில்லை.

ஏனெனில், அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 80-வது பிறந்தநாள் ஆகும். எனவே 14ம் தேதி கடந்த பிறகு, அதாவது நள்ளிரவு கடந்த பின்னரே அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று தெஹ்ரான் வலியுறுத்தியது. எனவே ஈரானில் அந்த ஒப்பந்தம் ஜூன் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதே சமயம், தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே சுமார் 7.5 மணி நேர கால வித்தியாசம் இருந்ததால், இருநாடுகள் இடையேயான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போது அமெரிக்காவில் அப்போது ஜூன் 14-ஆம் தேதியாகவே இருந்தது. இதன் மூலம் இரு தரப்பினரும் தாங்கள் விரும்பிய தேதியைப் பெற்றுக்கொண்டனர்.

இதனால், அமெரிக்காவில் இந்த ஒப்பந்தத்தைத் தனது பிறந்தநாள் சாதனையாக டிரம்ப் முன்னிறுத்த முடிந்த அதே வேளையில், ஈரானால் தனது நாட்டில் அவரது பிறந்தநாளன்று அதில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடுவதைத் தவிர்க்க முடிந்தது.

ஜூன் 14 அன்று அதாவது தனது பிறந்தநாளன்று ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று டிரம்ப் பல நாட்களாகவே பகிரங்கமாகக் கூறிவந்தார். பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், அன்றைய தினமே மின்னணு முறையில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கையான போக்கையே வெளிப்படுத்தினர். ஒப்பந்தம் “நாளை(ஞாயிறு)” கையெழுத்தாகும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், தீர்க்கப்படாத சிக்கல்களையும் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்,”ஈரானில் நள்ளிரவுக்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியிடப்படுவதை டெஹ்ரான் விரும்பவில்லை. டெஹ்ரானில் தேதி மாறிய சில நிமிடங்களிலேயே இறுதி அறிவிப்பு வெளியானது. இதனால், ஈரானில் திங்கட்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த இந்த ஒப்பந்தம், வாஷிங்டனைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாதனையாகவே அமைந்த ஒரு விசித்திரமான சூழல் உருவானது.

நெதன்யாகு

ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய நெதன்யாகு

இந்த ஒப்பந்தம் குறித்து டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில்,”லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கிட்டத்தட்ட சீர்குலைந்துபோகும் நிலைக்குச் சென்றது. இத்தாக்குதல் வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியது. பெஞ்சமின் நெதன்யாகு மிகவும் கடினமான நபர். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுத்து அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு மிகவும் நன்றியுள்ளதாக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

அதேசமயம் ஈரான் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் வளர்ச்சி மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழல் குறித்த தனது கவலைகளைத் அமெரிக்க அதிபரிடம் தெரிவிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முயன்று வருகிறார். இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை அவசரமாக சந்தித்து பேச நேரம் ஒதுக்கும்படி நெதன்யாகு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக லெபனான் விவகாரம் தொடர்பாக பேச இருக்கிறார் என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ശബരിമല സ്വര്‍ണക്കൊള്ള: പത്മകുമാറിനെ പ്രാഥമിക അംഗത്വത്തില്‍ നിന്ന് സസ്‌പെന്‍ഡ് ചെയ്ത് സി.പി.ഐ.എം

പത്തനംതിട്ട: ശബരിമല സ്വര്‍ണക്കൊള്ള കേസിലെ പ്രതിയും മുന്‍ എം.എല്‍.എയും സി.പി.ഐ.എം നേതാവുമായ...

“6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று (15.06.2026) முதல்வர் ஜோசப் விஜய்...

Southwest Monsoon: రాష్ట్రవ్యాప్తంగా విస్తరించిన నైరుతి రుతుపవనాలు.. పిడుగులతో కూడిన వర్షాలకు హెచ్చరిక

Southwest Monsoon: ఆంధ్రప్రదేశ్‌లో నైరుతి రుతుపవనాలు పూర్తిస్థాయిలో విస్తరించినట్లు రాష్ట్ర విపత్తుల...

RSS ಬಗ್ಗೆ ಜನರಲ್ಲಿ ಅನುಮಾನ ಮೂಡಿಸುವ ಕೆಲಸ ಇನ್ಮುಂದೆ ಸಾಧ್ಯವಿಲ್ಲ- ಮೋಹನ್ ಭಾಗವತ್ ತಿರುಗೇಟು

ತ್ರಿಶೂರ್,ಜೂನ್,15,2026 (www.justkannada.in): ಆರ್ ಎಸ್ಎಸ್ ಬಗ್ಗೆ ಜನರಲ್ಲಿ ಅನುಮಾನ ಮೂಡಿಸುವ...