20
May, 2026

A News 365Times Venture

20
Wednesday
May, 2026

A News 365Times Venture

'மூன்றே மாதம் மில்லியன் டாலர் கணக்கில்' தன்னுடைய முதலீட்டிற்கு 'அதிபர்' பதவியை பயன்படுத்திய ட்ரம்ப்?

Date:

‘மூன்று மாதங்களில் 3,700 மேலான டிரேட்கள்’ – அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதலீட்டு தகவல்கள் வெளியாகி உள்ளன.

2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ட்ரம்ப் 3,700-க்கும் அதிகமான டிரேட்களை செய்துள்ளார். இது ஒரு பிசினஸ் மேன் செய்திருந்தால் ஆச்சர்யமாகவோ, அதிர்ச்சியாகவோ இருந்திருக்காது.

ஆனால், பிசினஸ்மேன் கம் அமெரிக்க அதிபர் செய்தது தான் அமெரிக்காவில் பேசுபொருள் ஆகியுள்ளது.

மூன்று மாதங்களில் 3,700-க்கும் மேற்பட்ட டிரேட்கள் என்றால், ஒரு நாளைக்கு 40-க்கும் அதிகமான டிரேட்கள். இந்த அனைத்து டிரேட்களிலும் மொத்தமாக மில்லியன் டாலர் கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.

டிரேட்

ட்ரம்ப் முதலீடு செய்துள்ள பெரிய நிறுவனங்களின் பட்டியல்…

Nvidia, மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், போயிங், அமேசான், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், நெட்ஃபிளிக்ஸ், இன்டெல் மற்றும் இன்னும் பல நிறுவனங்கள்.

இந்த முதலீடுகள் தான் ட்ரம்பிற்கு சர்ச்சையை அழைத்து வந்துள்ளது.

ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆவார். அவர் எடுக்கும் முடிவுகள் இந்த நிறுவனங்களில் பிரதிபலிக்கும். மேலும், அவர் அந்த நிறுவனங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பவர்.

அதனால், இந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகளின் போக்கு அனைத்தும் ட்ரம்பிற்கு அத்துப்படியாக இருக்கும். அதை வைத்து அவர் இந்த டிரேட்களை செய்து லாபம் பார்த்திருப்பார் என்கிற சந்தேகம் எட்டிப்பார்க்கிறது.

முன்னாள் அதிபர்கள்…

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் போன்றவர்கள் தங்களுடைய முதலீடுகளை மூன்றாம் நபர் மூலம் தான் செய்வார்கள். அதனால், அவர்கள் எடுக்கும் முடிவுகள், அவர்களது சந்திப்புகள் அவர்களது முதலீடுகளில் பிரதிபலிக்காது.

ஆனால், ட்ரம்பிற்கு அப்படி இல்லை. ட்ரம்பின் முதலீடுகளை அவரது மகன்கள் தான் நிர்வாகிக்கிறார்கள்.

கத்தார், சவுதி அரேபியா, அமீரகத்தில் உள்ள பில்லியன் கணக்கான முதலீடுகளை ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் பார்த்துக் கொள்கிறார். இவர் தான் ஈரான் போருக்கு தன்னார்வ தூதர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

வெள்ளை மாளிகை, அமெரிக்க அதிபர் பதில்…

அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் தன்னுடைய லாபத்திற்காக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறாரா என்கிற கேள்வி இங்கே எழுகிறது.

இந்தக் கேள்விக்கு வெள்ளை மாளிகை, ‘அதிபர் தேச நலனுக்காக தான்’ செயல்படுகிறார் என்று கூறுகிறது. ட்ரம்பின் நிறுவனமோ, “ட்ரம்பின் முதலீடுகளை மூன்றாம் நபர் நிதி நிறுவனம் தான் கையாள்கிறது.

வர்த்தகங்கள் தானாக நடக்கும். அதனால், அந்தப் பரிவர்த்தனைகளுக்கும், ட்ரம்பிற்கும், ட்ரம்பின் குடும்பத்திற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று கூறுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഉമര്‍ ഖാലിദിന്റെ ജാമ്യാപേക്ഷ ദല്‍ഹി കോടതി തള്ളി

ന്യൂദല്‍ഹി: പൗരത്വ സമരകാലത്തെ കേസുകളില്‍ വിചാരണ തടവില്‍ കഴിയുന്ന ഉമര്‍ ഖാലിദിന്റെ...

AP Heatwave Alert: ఏపీలో భగ్గుమంటున్న ఎండలు.. రికార్డు స్థాయిలో ఉష్ణోగ్రతలు..

AP Heatwave Alert: ఆంధ్రప్రదేశ్‌లో ఎండల తీవ్రత రోజురోజుకు పెరుగుతోందని రాష్ట్ర...

ಹೈಕಮಾಂಡ್ ಸಿಎಂ, ಡಿಸಿಎಂ ಕರೆಸಿ ಮಾತನಾಡ್ತಾರೆ, ನಮ್ಮನ್ನಲ್ಲ- ಸಚಿವ ಸತೀಶ್ ಜಾರಕಿಹೊಳಿ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,19,2026 (www.justkannada.in):  ಸಿಎಂ ಬದಲಾವಣೆ ವಿಚಾರ ಚರ್ಚೆಯಾಗುತ್ತಿದ್ದು ಈ ಮಧ್ಯೆ...