19
April, 2026

A News 365Times Venture

19
Sunday
April, 2026

A News 365Times Venture

“பெண்களுக்கு எதிரான தீய எண்ணத்தோடு இந்த மசோதாவை திமுக, காங்கிரஸ் தடுத்து விட்டது" – அமித்ஷா

Date:

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் பா.ஜ.க- வின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ரோடு ஷோவில் ஈடுபட்டுள்ளார்‌.

மொடக்குறிச்சியில் அமித்ஷா

தொடர்ந்து பேசிய அமித்ஷா, “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது தி.மு.க- வின் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்படும் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சிறப்பான நிலைக்கு கொண்டு வரப்படும். புதிதாக அமையும் இந்த ஆட்சியின் மூலம் தமிழகத்தின் சிறப்புகள், பெருமைகள் மீட்டெடுக்கப்படும்.

தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் தன் மகன் உதயநிதியை தமிழகத்தின் முதல்வராகக் கொண்டு வரவேண்டும் என்பது மட்டும்தான். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் அரசியலில் பங்கெடுக்கும் வகையில் நாடளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்ததை நிறைவேற்றவிடாமல் தி.மு.க தடுத்திருக்கிறது. பாரத தேசத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான நல்லஇட ஒதுக்கீடு முயற்சியை தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் தோற்கடிக்கிறது.

மொடக்குறிச்சியில் அமித்ஷா

மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தவிர்த்து தமிழ்நாட்டில் மறுசீரமைப்பு மூலம் புதிய தொகுதி அமைய புதிய முயற்சி எடுத்தோம். ஆனால், தொகுதி எண்ணிக்கை அதிகமாக ஆகி விடக்கூடாது என்கிற குறுகிய நோக்கில் இப்படி செய்திருக்கிறார்கள். பெண்களுக்கு அதிக இடம் கிடைத்து விடக்கூடாது என்கிற தீய எண்ணத்தோடு இந்த மசோதாவை வெற்றி பெறாமல் தி.மு.க, காங்கிரஸ் தடுத்து விட்டது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മിഷണർ ഗ്യാനേഷ് കുമാറിനെ നീക്കം ചെയ്യാൻ പുതിയ ശ്രമങ്ങളുമായി പ്രതിപക്ഷ പാർട്ടികൾ

ന്യൂ ദൽഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മിഷണർ ഗ്യാനേഷ് കുമാറിനെ നീക്കം ചെയ്യാനുള്ള...

Jammu Kashmir: శ్రీనగర్ ఎయిర్‌పోర్టులో ఇద్దరు అమెరికా పౌరుల అరెస్ట్..

Jammu Kashmir: శ్రీనగర్ విమానాశ్రయంలో ఇద్దరు అమెరికన్ పౌరుల్ని అధికారులు అదుపులోకి...

ಕೃತಕ ಬುದ್ದಿಮತ್ತೆಗಾಗಿ ನಿಯಂತ್ರಕ ಚೌಕಟ್ಟು ರೂಪಿಸುವಲ್ಲಿ ನ್ಯಾಯಾಂಗ ನಿರ್ಣಾಯಕ ಪಾತ್ರ ವಹಿಸುತ್ತದೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,18,2026 (www.justkannada.in): ಭಾರತದಲ್ಲಿ ಕೃತಕ ಬುದ್ಧಿಮತ್ತೆಗಾಗಿ ನಿಯಂತ್ರಕ ಚೌಕಟ್ಟನ್ನು ರೂಪಿಸುವಲ್ಲಿ...

പാര്‍ട്ടിവിട്ട് ഫ്രറ്റേണിറ്റി മലപ്പുറം ജില്ലാ പ്രസിഡന്റ് ജംഷീല്‍ അബൂബക്കര്‍

മലപ്പുറം: വെല്‍ഫയര്‍ പാര്‍ട്ടി മലപ്പുറം ജില്ലാ സെക്രട്ടറി സ്ഥാനം രാജിവെച്ച് ജംഷീല്‍...