19
April, 2026

A News 365Times Venture

19
Sunday
April, 2026

A News 365Times Venture

"சினிமாவில் இருக்கக்கூடிய அதே சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே.!"- குஷ்பு ஆவேசம்

Date:

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

அந்த பரப்புரையில் “வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள்.

எந்த அரசியல் பிரச்னைகளுக்கோ அல்லது மதுரை மக்களுக்காகவோ குரல் கொடுக்காமல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென வந்துவிட்டால் மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?

பிரகாஷ் ராஜ்

சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு எத்தனை விஷயங்களை கஷ்டப்பட்டு கற்றிருப்பீர்கள். ஆனால், எம்.எல்.ஏவாக மட்டும் உடனே ஆகிவிடுவீர்களா?.

உங்கள் மனைவி 10 வருடங்களாக அரசியல் செய்து கேள்விகளை கேட்கிறார். அவருக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசிக்க மாட்டீர்களா?” என்று சுந்தர் சியை பிரகாஷ் ராஜ் சாடியிருந்தார்.

அதேபோல பிடிஆரும் குஷ்பு, சுந்தர் சியை சங்கி, சினிமா கூத்தாடி என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் குஷ்புவிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” பிரகாஷ் ராஜுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அவர் என் நண்பர் தான். குஷ்பு கட்சி மாறியது மட்டும்தான் தெரியுமா? பிடிஆர் இருக்கக்கூடிய கட்சியில், திமுகவிலே பிறந்து திமுகவிலே வளர்ந்தவர்கள் தான் இருக்கிறார்களா?

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ரகுபதி, சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் என சிலர் எல்லாம் அதே கட்சியில் பிறந்து அதே கட்சியில் வளர்ந்தவர்களா என்று நான் கேட்கிறேன். பிரகாஷ் ராஜ் தேர்தலில் டெபாசிட் கூட இல்லாமல் தோற்று போனார்.

அவர் அரசியலில் என்ன செய்துவிட்டார். எங்களைப் பார்த்து சங்கி, சினிமா கூத்தாடி என்று சொன்ன பிடிஆருக்கு அதே சினிமாவில் இருக்கக்கூடிய சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே பிரசாரம் செய்கிறார்கள்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പാര്‍ട്ടിവിട്ട് ഫ്രറ്റേണിറ്റി മലപ്പുറം ജില്ലാ പ്രസിഡന്റ് ജംഷീല്‍ അബൂബക്കര്‍

മലപ്പുറം: വെല്‍ഫയര്‍ പാര്‍ട്ടി മലപ്പുറം ജില്ലാ സെക്രട്ടറി സ്ഥാനം രാജിവെച്ച് ജംഷീല്‍...

Harish Rao: ధాన్యం కొనుగోళ్లు నత్తనడకన సాగుతోంది.. మాజీ మంత్రి హరీష్ రావు ఫైర్

Harish Rao: రాష్ట్రంలో ధాన్యం కొనుగోలు ప్రక్రియ నత్త నడకన సాగుతోందని...

ಮೈಸೂರು: ಬೇಸಿಗೆ ರಜೆ ಇಲ್ಲದೇ ತರಗತಿಗಳು – ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಂದ ದೂರು, ಎನ್‌ಎಸ್‌ಯುಐ ಎಚ್ಚರಿಕೆ

  ಮೈಸೂರು, ಏ.೧೯,೨೦೨೬:  ನಗರದಲ್ಲಿರುವ ಐಎಂಎಸ್‌ಸಿ (IMSC) ಇನ್‌ಸ್ಟಿಟ್ಯೂಟ್ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳು ಬೇಸಿಗೆ...

പോര്‍ച്ചുഗല്‍ സര്‍ക്കാരിന്റെ തൊഴില്‍ പരിഷ്‌ക്കരണത്തിനെതിരെ പ്രതിഷേധം; ലിസ്ബണില്‍ തെരുവിലിറങ്ങി പതിനായിരങ്ങള്‍

ലിസ്ബണ്‍: പോര്‍ച്ചുഗീസ് സര്‍ക്കാരിന്റെ പുതിയ തൊഴില്‍നിയമ പരിഷ്‌ക്കാരങ്ങള്‍ക്കെതിരെ ലിസ്ബണില്‍ പ്രതിഷേധ പ്രകടനം...