28
August, 2026

A News 365Times Venture

28
Friday
August, 2026

A News 365Times Venture

'நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் வேல்முருகன்!' – கூடுதல் தொகுதி கிடைக்குமா? த.வா.க ப்ளான் என்ன?

Date:

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறார். த.வா.க-வுக்கு ஒதுக்கும் 1 தொகுதியில் வேல்முருகனே களமிறங்குவார் எனச் சொல்லப்பட்ட சூழலில் ‘த.வா.க-வில் விருப்ப மனு விநியோகம் ஏன்?’ என விசாரித்தோம்.

ஸ்டாலின்

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ஐக்கியமானது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அப்போதே ஒரு எம்.பி சீட் கேட்ட அவருக்கு 2021-ல் ஒரேயொரு எம்.எல்.ஏ சீட்டைக் கொடுத்து ஆஃப் செய்தது தி.மு.க. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு எம்.பி சீட் கேட்டபோது கிடைக்கவில்லை. இச்சூழலில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு எத்தனை சீட் என்ற எதிர்பார்ப்பு த.வா.க முகாமை ஆட்டிப்படைக்கிறது.

நம்மிடம் பேசிய அந்தக் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள், “சாதி கட்சியாக நாங்கள் செயல்படவில்லை என்றாலும், வடமாவட்டங்களில் வன்னியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் வேல்முருகன். பா.ம.க பிளவடைந்திருக்கும் இச்சூழலில் ஏராளமான பா.ம.க-வினர் எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். தி.மு.க கூட்டணியில் இணைந்த இந்த 8 ஆண்டுகளில் வடமாவட்டங்களில் பா.ம.க-வுக்கு இணையான கிளைக் கட்டமைப்பை உறுதி செய்திருக்கிறோம்.

விருப்ப மனு த.வா.க நிர்வாகிகள்

சுப.உதயகுமாரின் பச்சைத் தமிழகம் கட்சியை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைத்திருக்கிறோம். நா.த.க-விலிருந்து வரும் இளைஞர்களுக்கு த.வா.க-தான் அடைக்கலம் கொடுத்துவருகிறது. எத்தகைய உழைப்பை தமிழக அரசியல் களத்தில் செலுத்தினாலும்கூட 1 எம்.எல்.ஏ சீட்டிலேயே நிற்கிறது தி.மு.க” என வருந்தினர்.

இம்முறை எத்தனை சீட் கிடைக்கும் என த.வா.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம் “பிப்ரவரி 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 5 முதல் 6 தொகுதிகள் வரையிலான கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் தி.மு.க தரப்பில் ஏற்கனவே உள்ள ஒரு தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்,

விருப்ப மனு த.வா.க நிர்வாகிகள்

தொகுதி வேண்டுமானாலும் மாற்றித் தருகிறோம் என்றனர். ‘மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கு தாராளம் காட்டும் தி.மு.க எங்களுக்கு 2 சீட் தர மறுப்பது ஏன்?’ என வடமாவட்ட அமைச்சர்களிடமும் முதல்வர் அலுவலகத்திலும் முறையிட்டார் அண்ணன் வேல்முருகன்.

ஒரு சீட் உறுதி.. இன்னொரு சீட் குறித்து பரிசீலிக்கிறோம் என தகவல்கள் வரவே நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறோம். இரண்டாவது சீட் கிடைக்கிறதோ இல்லையோ.. களப்பணிகளை செய்திட எங்கள் கட்சியில் பலநூறு இளைஞர்கள் தன்முனைப்புடன் இருக்கிறார்கள் என்பதை வெளிக்கொணருவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது” என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில்...

OTR: ఎమ్మెల్యే పదవిని వదిలి మేయర్ అవుతారా? విశాఖలో టీడీపీ నేతల కొత్త స్కెచ్!

OTR: కొడితే కొట్టాలిరా…. సిక్స్‌ కొట్టాలి అంటూ కొత్తగా సాంగులు సింగుతున్నారట...

ಕಾಮಗಾರಿ ಅಪೂರ್ಣ, ಬಳಕೆಗೆ ಬಾರದ ಸ್ಥಿತಿ:  “ಸೈನಿಕ” ಉದ್ಯಾನವನಕ್ಕೆ ಗ್ರಹಣವೇ?

ಮೈಸೂರು,ಆಗಸ್ಟ್,27,2026 (www.justkannada.in): ನಗರದ ದಟ್ಟಗಳ್ಳಿ 3ನೇ ಹಂತದಲ್ಲಿ, ಮಹಾಲಕ್ಷ್ಮಿ ದೇವಸ್ಥಾನದ...

പ്രതിപക്ഷ ഉപനേതാവ് തര്‍ക്കം തുടരുന്നു; പ്രസ്താവനകളില്‍ നേതാക്കള്‍ മിതത്വം പാലിക്കണമെന്ന് ടി.പി രാമകൃഷ്ണന്‍

തിരുവനന്തപുരം: പ്രതിപക്ഷ ഉപനേതാവ് തര്‍ക്കത്തിലെ പ്രസ്താവനകളില്‍ നേതാക്കള്‍ മിതത്വം പാലിക്കണമെന്ന് എല്‍.ഡി.എഫ്...