20
October, 2026

A News 365Times Venture

20
Tuesday
October, 2026

A News 365Times Venture

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?

Date:

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மாநகராட்சிக் கூட்டம்

இதுசம்பந்தமாகப் பேசிய துணை மேயர் மகேஸ் குமார், “மாநகராட்சியின் திட்டங்களை நிறைவேற்ற போதுமான அளவு நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை. கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை அளிக்கவில்லை. வேளச்சேரி மேம்பாலம் உட்பட முக்கியமான திட்டங்களை அரசு முடக்கியிருக்கிறது. ஒப்பந்தத்தாரர்கள் அவர்கள் செய்த பணிகளுக்கான பில் க்ளியர் ஆகவில்லை எனக் கூறி விளம்பரம் கொடுத்திருக்கின்றனர்.

அம்மா உணவகம் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் பெருமிதமாகப் பேசுகின்றனர். சென்னையில் அம்மா உணவம் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அம்மா உணவகத்துக்காகச் செலவளிக்கிறோம்.

காலை உணவுத்திட்டம் தனியார் நிதி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. அந்தப் பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்வதற்கான வாகன செலவைக் கூட மாநகராட்சிதான் ஏற்றிருக்கிறது. அதற்காகவாது நிதியை விடுவிக்க வேண்டும். நிதி விடுவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறோம்.

துணை மேயர் மகேஸ் குமார்
துணை மேயர் மகேஸ் குமார்

நிதி நெருக்கடியில் இருக்கிறோம் எனக் கூறி 21,000 கோடி கடன் வாங்கி தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றுகிறது. எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுக்கிறோம் என்றெல்லாம் அறிவிக்கிறார்கள். அதேமாதிரி, மாநகராட்சிக்கும் முதல்வரிடம் கூறி சிறப்பு நிதியை விடுவிக்க வேண்டும். மேயர் பிரியா இதுசம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். மாநகராட்சி ஆணையர் நகராட்சி நிர்வாகத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரிடம் பேசி நிதியைப் பெற்று வாருங்கள்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“தொடரும் கொலைகள்: நான் அப்போதே சொன்னேன்" – ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் காவல்துறை தள்ளாடுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின்...

Kilauea volcano: 55వ సారి కిలావుయా అగ్ని పర్వత విస్పోటనం..

Kilauea volcano: అమెరికాలోని హవాయి ద్వీపంలోని క్రియాశీల అగ్నిపర్వత్వం కిలావుయా మరోసారి...

സെന്‍സസ് ഭേദഗതി: സ്വകാര്യ വിവരങ്ങള്‍ സംഘപരിവാറിന് കൈക്കലാക്കാം; ഭേദഗതികള്‍ പിന്‍വലിക്കണമെന്ന് എം.എ. ബേബി

ന്യൂദല്‍ഹി:കേന്ദ്ര ആഭ്യന്തര മന്ത്രാലയം സെന്‍സസ് ചട്ടങ്ങളില്‍ വരുത്തിയ ഭേദഗതികളിലൂടെ രാജ്യത്തെ പൗരരുടെ...

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை – கொந்தளிக்கும் சி.பி.எம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் என்ற தனியார் தாதுமணல் கம்பெனியிடம் இருந்து மகள் வீணாவின்...