16
May, 2026

A News 365Times Venture

16
Saturday
May, 2026

A News 365Times Venture

`கருப்பு சிவப்புக் கொடி; தங்களது நல்வரவு – நல்லுறவு"- தேமுதிக-வை வரவேற்ற ஸ்டாலின்

Date:

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

திமுகவில் இணைந்த தேமுதிக

இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார். தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது.

தேமுதிக திமுகவில் இணைந்தது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ” முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

திமுகவில் இணைந்த தேமுதிக
திமுகவில் இணைந்த தேமுதிக

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்”என்று பதிவிட்டிருக்கிறார்.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

'எடப்பாடிக்கு எதிராகவே `அதிமுக அதிகாரப்பூர்வ' ஊடகங்கள் திரும்பியது எப்படி?

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடும், தொலைக்காட்சியும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக...

Hyderabad: గుడ్డిగా నమ్మితే ప్రాణాలు గాల్లో కలిసినట్టేనా? హైదరాబాద్ మర్డర్ నేర్పిస్తున్న పాఠమిదేనా?

హైదరాబాద్‌లో జరుగుతున్న వరుస ఘటనలతో ఎవరిని పనిలో పెట్టుకోవాలన్నా దడుసుకునే పరిస్థితి...