26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" – எடப்பாடி பழனிசாமி காட்டம்

Date:

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். ஒரு சாதியை வைத்து மட்டும் அரசியல் நடத்துவது என்பது இயலாத காரியம். எம்.ஜி.ஆர்., ஆனாலும், ஜெயலலிதா ஆனாலும் மற்றும் அவர்கள் மறைவுக்கு பிறகும் அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதத்திற்கு அப்பார்பட்ட கட்சி. அதிமுகவில் எவ்வளவு சாதி சங்கங்கள், எவ்வளவு மதத்தை சேர்ந்தவர்கள் எங்களது இயக்கத்தில் இருக்கின்றனர் தெரியுமா.

எடப்பாடி பழனிசாமி

நாங்கள் ஒற்றுமையாக செயல்படுகிறோம். சில பேருக்கு அது பொறுக்கவில்லை, எரிச்சல், வெறுப்பின் வெளிப்பாடு தான் இப்படிப்பட்ட வார்த்தையை கக்கிக் கொண்டிருக்கின்றனர். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது. இன்னும் 8 மாதத்தில் கூட்டணி நிலைக்குமா நிலைக்காதா என்பது குறித்து செய்தியாளர்கள் பேச்சிலேயே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. அந்த 8 மாதத்தில் சிறப்பான கூட்டணி அமையும். அப்போது அனைவருக்கும் தெரிவிப்போம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എസ്.ഐ.ആര്‍ ഒരുവര്‍ഷം പിന്നിട്ടപ്പോള്‍ വോട്ടര്‍ പട്ടികയില്‍ നിന്ന് പുറത്താക്കിയത് ആറ് കോടിയോളം വോട്ടര്‍മാരെ

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ തീവ്ര വോട്ടര്‍ പട്ടിക പുനപരിശോധന (എസ്.ഐ.ആര്‍) ഒരു വര്‍ഷം...

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட...

Saikrishna Lockup Death: సాయికృష్ణ లాకప్ డెత్ కేసులో సిట్ దూకుడు.. మరో ఇద్దరు పోలీసుల కోసం గాలింపు!

విజయవాడలో సంచలనం సృష్టించిన సాయికృష్ణ లాకప్ డెత్ కేసు దర్యాప్తును ప్రత్యేక...

ಟೌನ್ ಶಿಪ್ ಹೆಸರಿನಲ್ಲಿ ರೈತರಿಂದ ಭೂಮಿ ಕಸಿದುಕೊಳ್ಳುವುದು ತಪ್ಪು- ಪ್ರತಾಪ್ ಸಿಂಹ

ಹಾಸನ,ಜೂನ್,26,2026 (www.justkannada.in):  ಬಿಡದಿಯ ಟೌನ್ ಶಿಪ್ ನಿರ್ಮಾಣ ವಿಚಾರ ಜಟಾಪಟಿ...