26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' – அமெரிக்க வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது?

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரி பிளஸ் அபராத தொகை விதித்துள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட்டிடம் கேட்கப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் பதில் என்ன?

அதற்கு அவர், “அமெரிக்க அதிபர் வர்த்தக பற்றாக்குறை மற்றும் இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து எங்களுடைய கருத்துகளைத் தெளிவாக கூறிவிட்டார்.

அதற்காக அவர் நேரடியாக இந்தியா மீது எடுத்த நடவடிக்கை எடுத்ததைப் பார்த்திருப்பீர்கள்.

இந்தியா எங்களுடைய முக்கியமான கூட்டாளி. அதனால், அவர்களிடம் முழுமையான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம். அது தொடரும்.” என்று பதிலளித்துள்ளார்.

டாமி பிகாட்

வரியின் பின்னணி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியா மீது 25 சதவிகித வரியையும், ரஷ்யா உடன் வணிகம் செய்வதற்காக அபராதத்தையும் விதித்திருந்தார்.

ஆனால், தற்போது 25 சதவிகித வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி உள்ளார். இதற்கு இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான், இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று டாமி பிகாட் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் வரி விகிதம் குறைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

രാമക്ഷേത്ര തട്ടിപ്പ്: ആറ് പേര്‍ കൂടി അറസ്റ്റില്‍; ചമ്പത്ത് റായും അനില്‍ മിശ്രയും രാജിവച്ചു

ലഖ്‌നൗ: അയോധ്യ രാമക്ഷേത്ര സംഭാവന തട്ടിപ്പില്‍ ആരോപണ വിധേയനായ ക്ഷേത്ര ട്രസ്റ്റ്...

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல… இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! – மத்திய அரசு சொல்வதென்ன?

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' -...

ಬಿಡದಿ ಟೌನ್ ಶಿಪ್ ಬಗ್ಗೆ ವರಿಷ್ಠರು ಪರಿಹಾರ ನೀಡ್ತಾರೆ- ಸಚಿವ ಸತೀಶ್ ಜಾರಕಿಹೊಳಿ

ಬೆಳಗಾವಿ,ಜೂನ್,26,2026 (www.justkannada.in): ಬಿಡದಿ ಟೌನ್ ಶಿಪ್ ಬಗ್ಗೆ ಗೊಂದಲ ಇರುವುದು...