23
September, 2026

A News 365Times Venture

23
Wednesday
September, 2026

A News 365Times Venture

"எங்களால்தான் உடை அணிகிறீர்கள்" – பாஜக எல்எல்ஏ சர்ச்சை பேச்சு; மகாராஷ்டிராவில் வலுக்கும் எதிர்ப்பு

Date:

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுப்பதைச் சில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் அடிக்கடி சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது இது போன்ற ஒரு சர்ச்சையில் மகாராஷ்டிரா ஜால்னா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிகர் சிக்கி இருக்கிறார். பாபன்ராவ் தனது தொகுதிக்கு உட்பட்ட பார்துர் என்ற இடத்தில் கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் பேசுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

பா.ஜ.க எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிகர்

அதில், “உங்களது தந்தை விவசாயம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி ரூ.6,000 கொடுக்கிறார். உங்களது தாய், சகோதரிகள், உங்களது மனைவிகளுக்கு லட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,500 கொடுக்கிறோம்.

எங்களால் தான் நீங்கள் ஆடை மற்றும் காலணி அணிகிறீர்கள். நீங்கள் வைத்திருக்கும் தொலைபேசி கூட எங்களால் தான் உங்களிடம் இருக்கிறது. எங்களிடம் இருந்து அனைத்தையும் வாங்கிக் கொண்டு எங்களை விமர்சிக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் அரசைச் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருவதைச் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசியிருந்தார். பாபன் ராவ் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பாபன் ராவ் கருத்துக்கு அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா (உத்தவ்) சட்டமேலவை உறுப்பினர் அம்பாதாஸ் தன்வே இது குறித்து கூறுகையில், “பாபன் ராவ் கருத்து ஆங்கிலேய மனநிலையைக் காட்டுகிறது. மக்களால் தான் பாபன் ராவ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எம்.எல்.ஏ. அணியும் உடைகள், காலணி, விமான டிக்கெட், காருக்கான பெட்ரோல் போன்றவை மக்களால் தான் கிடைக்கின்றன. மக்கள் எம்.எல்.ஏ.வின் வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കേരളത്തില്‍ സി.ജെ.പിയുടെ ഫ്യൂച്ചര്‍ പ്ലാന്‍: ഏതെല്ലാം വിഷയം ഏറ്റെടുക്കും, സ്‌കൂള്‍ ഠീക് കരോ എവിടെയെല്ലാം

കോക്രോച്ച് ജനതാ പാര്‍ട്ടി (സി.ജെ.പി) രാജ്യത്താകെ അവരുടെ പ്രവര്‍ത്തനം വ്യാപിപ്പിക്കാനൊരുങ്ങുകയാണ്. ഇതിന്റെ...

`நான் இருக்கேன்' கையில் முத்தமிட்டு ஆறுதல் சொன்ன விஜய்; உருகிய வி.எஸ்.பாபு… 10 நிமிட சந்திப்பு!

75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்கு சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை நெல்சன் மாணிக்கம்...

iQOO Z11 Lite 5G: 6500mAh బ్యాటరీ, 44W ఫాస్ట్ ఛార్జింగ్, IP65 రేటింగ్‌.. iQOO నుంచి కొత్త ఫోన్ లాంచ్..

స్మార్ట్‌ఫోన్ తయారీ సంస్థ ఐకూ (iQOO) తన బడ్జెట్ 5G డివైజ్...

വിവാഹത്തിനും കുടുംബ ചടങ്ങിനും ഹെലികോപ്റ്റര്‍; മുഖ്യമന്ത്രിയെ പരിഹസിച്ച് വി. ശിവന്‍കുട്ടി

തിരുവനന്തപുരം: മുഖ്യമന്ത്രിയുടെ ചാര്‍ട്ടേഡ് വിമാനയാത്രയില്‍ പരിഹാസവുമായി മുന്‍ മന്ത്രി വി ശിവന്‍കുട്ടി....