24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

“அதனால் தான், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது..'' – பவன் கல்யாண் சொன்ன காரணம்

Date:

‘முருக பக்தர்கள் மாநாடு’ – மதுரை பாண்டி கோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

பவன் கல்யாண்

இந்த மாநாட்டில் பவன் கல்யாண் பேசியதாவது, “என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன், என்னை வளர்த்தது முருகன், துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கும் அதிகம், முதற்படை, ஆறாம் படை வீடுகள் இங்குள்ளது.

முருகனின் தாயாரும் முதல் தமிழ்ச்சங்கத்திற்கு தலைமையேற்று மதுரையில் தான் இருந்தார்.

மதுரையில் முருகனின் தாயாரும் தந்தையும் இருக்கிறார் முருகனும் இருக்கிறார். அந்தப் புண்ணியத்தில்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் அவதரித்தார். தென் தமிழகத்தின் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். அவர் சிலையருகே மயிலும் வைக்கப்பட்டுள்ளது.

தேவர் வடிவில் முருகன் வாழ்ந்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தார் அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்.

நமது நாட்டின் நம்பிக்கைக்கு அழிவில்லை, யாராலும் அழிக்க முடியாது, ஆலமரம் போன்றது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஆழமாக உள்ளது.

முருகன் மாநாட்டை ஏன் மதுரை நடத்துகிறீர்கள்? என்று ஒரு அரசியல் தலைவர் கேட்டார்.

நாளை சிவபெருமான், அம்மனைப் பார்த்து கேட்கலாம். இந்த சிந்தனை மிகவும் ஆபத்தானது. நான் பள்ளிக்கு பட்டை போட்டு சென்றப்போது என்னைக் கேள்வி கேட்டார்கள். ஆனால், இந்தக் கேள்விகள் நமக்கு பழகிவிட்டது.

முஸ்லீம் முஸ்லீமாக இருக்கலாம். கிறிஸ்துவன் கிறிஸ்துவனாக இருக்கலாம். ஆனால், ஒரு இந்து மட்டும் இந்துவாக இருக்க முடியாது. என்னுடைய நம்பிக்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்? உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்பதில்லை. இந்தப் பழக்கத்தை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

முருகனைக் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதத்தைக் கேள்வி கேட்க முடியுமா? எங்களைக் கேள்வி கேட்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.

பவன் கல்யாண் - அண்ணாமலை
பவன் கல்யாண் – அண்ணாமலை

உலகம் முழுக்க முருகன் இருக்கிறார். ஆனால், அவர் தமிழ்நாட்டில் தான் கால் ஊன்றி இருக்கிறார். அதனால் தான், மதுரையில் இந்த மாநாடு நடக்கிறது.

இங்கு சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ணர், காளி மாதா கருப்பு தான். ஆனால், கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டி பார்க்கும் கூட்டம் ஒன்று உள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை சிலர் கிண்டல் செய்தனர். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அது ஜனநாயகம் அளித்தது.

என்னுடைய நிறம், நம்பிக்கை, பார்வை எல்லாத்தையுமே கிண்டல் செய்வார்கள். நம்மை கிண்டல் செய்ய அவர்கள் யார்? இந்தக் கிண்டலை அரேபியாவில் இருந்த மதத்தை செய்ய முடியுமா? காரணம், நாம் அமைதியானவர்கள்.

நம் கடவுளை திட்டும் கூட்டம், காணாக் கூட்டமாக ஆகிவிடும்.

அன்பால் இணைவோம்… ஆவேசத்தால் வெல்வோம்.

முருக பக்தர்கள் மாநாடு

கடவுளை நம்பவில்லை என்றால் எந்தக் கடவுளையும் நம்பக் கூடாது. ஆனால், நம் நாட்டின் நாத்திகவாதிகள் இந்து கடவுளை மட்டும் தான் நம்பமாட்டார்கள். இது தான் மத சார்பின்மை என்று கூறுவார்கள்.

இந்த நாத்திகவாதிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்த மிகப்பெரிய ஆயுதம் ‘பேச்சு சுதந்திரம்’.

பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நம்மை திட்டிக்கொண்டே இருப்பார்கள். அதை நாம் அமைதியாக கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

நான் இஸ்லாமை மதிக்கிறேன்… கிறிஸ்துவத்தை மதிக்கிறேன். நீங்கள் எங்களுடைய மதத்தையும், எங்கள் நம்பிக்கையும் அவமதிக்காதீர்கள்” என்று பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗ്യാനേഷ് കുമാറിനെ മോദിയും അമിത് ഷായും സംരക്ഷിക്കുന്നു; ജനാധിപത്യം തകരുന്നത് നോക്കി നില്‍ക്കില്ല: രാഹുല്‍ ഗാന്ധി

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാര്‍ അടിയന്തരമായി രാജിവെക്കണമെന്ന് ലോക്‌സഭാ...

“மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" – டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்...

SBI Debit Card: మీ దగ్గర SBI ఏటీఎం కార్డు ఉందా.. వాడకపోతే ఎంత ఛార్జీ పడుతుందో తెలుసా..

మీ దగ్గర స్టేట్ బ్యాంక్ ఆఫ్ ఇండియా ఏటీఎం డెబిట్ కార్డు...

ഓസ്‌ട്രേലിയന്‍ സര്‍ക്കാര്‍ ഹെല്‍ത്ത് കെയര്‍ ഡാറ്റാബേസ് ഹാക്ക് ചെയ്ത് ഓപ്പണ്‍ എ.ഐ ഏജന്റ്: അറിഞ്ഞത് മാസങ്ങള്‍ക്കുശേഷം

ന്യൂയോര്‍ക്ക്: ഓസ്‌ട്രേലിയയുടെ ആരോഗ്യവകുപ്പിന്റെ വെബ്‌സൈറ്റ് ഹാക്ക് ചെയ്ത് സ്വകാര്യഡാറ്റയിലേക്ക് നുഴഞ്ഞുകയറി ഓപ്പണ്‍...