24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

தேர்தல் ஆணையம்: “இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" – முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

Date:

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி தனிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட எந்தவொரு தனி அதிகாரியும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் அல்ல.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, மூன்று ஆணையர்களும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பார்கள்.

தேர்தல் ஆணையம்

ஆனால் இறுதி முடிவு என்பது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ அல்லது பெரும்பான்மை வாக்களிப்பின் அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும். மூன்றில் இரண்டு ஆணையர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதுவே பெரும்பான்மையாகும். இரு ஆணையர்கள் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டார் என்பதுதான் தற்போதைய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது

தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி, பலத்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஒருமுறை தேர்தல் முடிந்துவிட்டால் அதை யாரும் ரத்து செய்ய முடியாது. முடிந்த விஷயம் முடிந்ததுதான். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. அதற்காக முறையான நிர்வாக மற்றும் அரசியல் சாசன நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும். யாராவது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கைகளைத் தொடங்கினால் மட்டுமே அடுத்தகட்ட செயல்பாடுகள் தெரியவரும்.

 ஓ.பி. ராவத்
ஓ.பி. ராவத்

வாக்காளர் சேர்க்கைக்கான ‘ஃபார்ம் 6’-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் என்பது, குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இன்றி தேர்தல் ஆணையம் தனது வரம்பை மீறி செயல்பட்டுள்ளதைதான் சுட்டிக்காட்டுகிறது. 6-ல் இரண்டு வகையான விண்ணப்பங்கள் உள்ளன. ஒன்று புதிய வாக்காளர்களுக்கானது, மற்றொன்று பழைய வாக்காளர்களுக்கானது. உதாரணமாக, 40 வயது நபர் ஒருவர் இதுவரை எங்குமே வாக்காளராகப் பதிவு செய்யாமல் புதிதாக விண்ணப்பிக்கும் போது, இத்தனை காலம் அவர் எங்கு இருந்தார் என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

அதற்காக அவர்களின் பெற்றோர் மற்றும் பிற கூடுதல் விவரங்களைக் கேட்கும் தனிப் படிவம் பயன்படுத்தப்படும்.
ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கும் பெற்றோர் குறித்த விவரங்களை கட்டாயமாக்கி, அந்தத் படிவத்தை அனைவருக்கும் பொதுவாக்கியுள்ளது. இது ‘பாரம் 6’-ல் செய்யப்பட்டத் திருத்தத்திற்குச் சமம். எந்தவொரு படிவத்திலும் திருத்தம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. இதனால் தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഓസ്‌ട്രേലിയന്‍ സര്‍ക്കാര്‍ ഹെല്‍ത്ത് കെയര്‍ ഡാറ്റാബേസ് ഹാക്ക് ചെയ്ത് ഓപ്പണ്‍ എ.ഐ ഏജന്റ്: അറിഞ്ഞത് മാസങ്ങള്‍ക്കുശേഷം

ന്യൂയോര്‍ക്ക്: ഓസ്‌ട്രേലിയയുടെ ആരോഗ്യവകുപ്പിന്റെ വെബ്‌സൈറ്റ് ഹാക്ക് ചെയ്ത് സ്വകാര്യഡാറ്റയിലേക്ക് നുഴഞ്ഞുകയറി ഓപ്പണ്‍...

AP Liquor Shops: లిక్కర్ షాపులపై కీలక నిర్ణయం.. ఇక రెన్యువల్ గడువు పొడిగింపు లేదు..!

AP Liquor Shops: ఆంధ్రప్రదేశ్‌లో 2026–27 ఎక్సైజ్ సంవత్సరానికి ఏ4 మద్యం...

കുടുംബ കലഹങ്ങള്‍ വേണ്ട; എ.ഐ ക്യാമറ നിയമ ലംഘന നോട്ടീസുകളില്‍ ചിത്രങ്ങള്‍ ഒഴിവാക്കാന്‍ എം.വി.ഡി

തിരുവനന്തപുരം: മോട്ടോര്‍ വാഹന വകുപ്പിന്റെ എ.ഐ ക്യാമറകള്‍ വഴിയുള്ള നിയമലംഘനങ്ങള്‍ പരിശോധിക്കുന്നതിനുള്ള...

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” – ஐ.நா-வில் ஈரான் அதிபர்

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர்...