23
September, 2026

A News 365Times Venture

23
Wednesday
September, 2026

A News 365Times Venture

மாணவிக்கு பாலியல் தொல்லை: 'இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் இருப்பார்கள்' – கீதா ஜீவன்

Date:

தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8வது வகுப்பு படித்து வரும்  மாணவிக்கு, அந்த விடுதியின்  காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

மாணவிக்கு  கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கீதா ஜீவன்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச்  சந்தித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்திருக்கிறார். “ 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை ஏற்க முடியாத ஒன்று. அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க உள்ளோம்.

மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால்…

வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்றச் சம்பவம் நடந்துள்ளது. மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால் காவலாளி உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். சம்பவம் நடந்த விடுதியில் உடனே மூன்று பெண் காவலர்களை நியமிக்க சொல்லி இருக்கிறோம்.

 கீதா ஜீவன்
கீதா ஜீவன்

மற்ற மாணவிகளிடமும் நாங்கள் விசாரணை நடத்தினோம். ஆனால் அவர்கள் எல்லாம் விடுதி காவலர் மீது எந்தப் புகாரும் முன்வைக்கவில்லை.  இருப்பினும் முறைப்படி விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കേരളത്തില്‍ സി.ജെ.പിയുടെ ഫ്യൂച്ചര്‍ പ്ലാന്‍: ഏതെല്ലാം വിഷയം ഏറ്റെടുക്കും, സ്‌കൂള്‍ ഠീക് കരോ എവിടെയെല്ലാം

കോക്രോച്ച് ജനതാ പാര്‍ട്ടി (സി.ജെ.പി) രാജ്യത്താകെ അവരുടെ പ്രവര്‍ത്തനം വ്യാപിപ്പിക്കാനൊരുങ്ങുകയാണ്. ഇതിന്റെ...

`நான் இருக்கேன்' கையில் முத்தமிட்டு ஆறுதல் சொன்ன விஜய்; உருகிய வி.எஸ்.பாபு… 10 நிமிட சந்திப்பு!

75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்கு சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை நெல்சன் மாணிக்கம்...

iQOO Z11 Lite 5G: 6500mAh బ్యాటరీ, 44W ఫాస్ట్ ఛార్జింగ్, IP65 రేటింగ్‌.. iQOO నుంచి కొత్త ఫోన్ లాంచ్..

స్మార్ట్‌ఫోన్ తయారీ సంస్థ ఐకూ (iQOO) తన బడ్జెట్ 5G డివైజ్...

വിവാഹത്തിനും കുടുംബ ചടങ്ങിനും ഹെലികോപ്റ്റര്‍; മുഖ്യമന്ത്രിയെ പരിഹസിച്ച് വി. ശിവന്‍കുട്ടി

തിരുവനന്തപുരം: മുഖ്യമന്ത്രിയുടെ ചാര്‍ട്ടേഡ് വിമാനയാത്രയില്‍ പരിഹാസവുമായി മുന്‍ മന്ത്രി വി ശിവന്‍കുട്ടി....